இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,374 ஆக உயர்ந்துள்ளது. புதுடெல்லி, உலகையே அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ், இந்தியாவில் வேகமாக பரவ தொடங்கி இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் நோய்க்கிருமி பரவும் வேகத்தை முழுமையாக கட்டுப் படுத்த முடியவில்லை. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,374 ஆக உயர்ந்துள்ளது. …
கரோனா: குடியரசு முன்னாள் தலைவர்கள், முன்னாள் பிரதமர்கள் மற்றும் முக்கிய எதிர்க்கட்சித்தலைவருடன் பிரதமர் மோடி ஆலோசனை
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து குடியரசு முன்னாள் தலைவர்கள், முன்னாள் பிரதமர்கள் மற்றும் முக்கிய எதிர்க்கட்சித்தலைவருடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்ததினார். நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அந்த நோய்த்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வரும் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், அத்தியாவசியப் பொருள்களை விற்கும் கடைகள் தொடா்ந்து இயங்கி வருகின்றன. இந்நிலையில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி …
பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க விளக்கேற்றி ஒளிமயமான வாழ்வுக்கு வழிவகுப்போம் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க விளக்கேற்றி ஒளிமயமான வாழ்வுக்கு வழிவகுப்போம் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார். சென்னை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவலில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க ஆக்கப்பூர்வமான முறையிலே நடவடிக்கை எடுத்து வருவது நமக்கெல்லாம் நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறது. இப்போதைய இந்தியாவுக்கு தேவை தனித்திரு, விழித்திரு, கொரோனாவை ஒழித்திடு. பிரதமர் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஏற்கனவே டிவி, ரேடியோ மூலம் பேசியது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. …
மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்க்க வேண்டும்: அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் நேரம் குறைப்பு – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்க்க வேண்டும் என்றும், அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கான கால அளவு மதியம் 1 மணி என குறைக்கப்பட்டுள்ளதாகவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை, தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொரோனா பெருந்தொற்றினால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தருணத்தில் மக்களை பாதுகாக்க அரசின் முயற்சிகளோடு அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது. கொரோனா பெரும் தொற்று நோயினால் மனித சமுதாயத்திற்கு ஏற்படவுள்ள …
அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டில் பொழுது போக்குக்காக தொலைக்காட்சி வசதி – அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டில் பொழுது போக்குக்காக தொலைக்காட்சி வசதி ஏற்பாடு செய்யப்படுகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ‘ஸ்கை லிப்ட்’ வாகனம் மூலம் தீயணைப்பு துறையினர் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர். இந்த பணியை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மேற்பார்வையிட்டார். அப்போது டாக்டர்கள், தீயணைப்பு வீரர்கள், மருத்துவ ஊழியர்கள் அனைவரும் ‘வீட்டில் இருப்போம், பாதுகாப்பாக இருப்போம்,’ ‘ஒற்றுமையாக இருப்போம், அரசுக்கு …
அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்ல சிறப்பு பார்சல் ரெயில் இயக்கம் – தெற்கு ரெயில்வே அறிவிப்பு
அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்ல சிறப்பு பார்சல் ரெயில் இயக்கம் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. சென்னை, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- அத்தியாவசிய தேவைகளுக்கான பார்சல்களை எடுத்து செல்லும் வகையில் கீழ்க்கண்ட சிறப்பு பார்சல் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. * சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-கங்காரியா(வண்டி எண்: 00908) இடையே சிறப்பு பார்சல் ரெயில் வருகிற 8-ந்தேதி இரவு 10 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். * யஸ்வந்த்பூர்-கோரக்பூர்(00607) இடையே சிறப்பு பார்சல் ரெயில் …
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளின் பட்டியல் – தமிழக அரசு வெளியீடு
தமிழகமெங்கும் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சென்னை, கொரோனா கிருமி தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவமனைகளின் பட்டியலை ஏற்கனவே மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டு இருந்தது. இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சில தனியார் மருத்துவமனைகளை தேர்ந்தெடுத்து, அங்கு கொரோனாவுக்கான சிகிச்சை பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- கொரோனா நோயாளிகளுக்கு …
சீனாவிடம் வாங்கிய கொரோனா வைரஸ் பரிசோதனை கருவிகள் தரமற்றவை – ஐரோப்பிய நாடுகள் ‘பகீர்’ குற்றச்சாட்டு
சீனாவிடம் வாங்கிய கொரோனா வைரஸ் பரிசோதனை கருவிகள் தரமற்றவை என்று ஐரோப்பிய நாடுகள் பகீர் குற்றச்சாட்டு கூறியுள்ளன. மாட்ரிட், தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக சீனாவும், அந்நாட்டின் பிரபல மருத்துவ கருவிகள் தயாரிப்பு நிறுவனங்களும் மேற்கத்திய நாடுகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. கொரோனா வைரசை விரைவாக கண்டறியும் கருவிகள் மற்றும் தரமான முகக் கவசங்கள் தங்களிடம் விற்பனைக்கு உள்ளதாகவும் அறிவிப்பு வெளியிட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து, கொரோனா வைரசை கண்டறியும் பரிசோதனை கருவி …
உலக அளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியது
உலக அளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஜெனீவா, சீனாவில் உருவாகி மற்ற நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைக்கிறது. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காததால், அது மக்களுக்கு பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒவ்வொரு நாடும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் நோய்க்கிருமி பரவுவதை முழுமையாக …
பிரதமர் மோடி அழைப்பு விடுத்த விளக்கேற்றும் நிகழ்வுக்கான நடைமுறை வெளியீடு
பிரதமர் மோடி அழைப்பு விடுத்த, விளக்கேற்றும் நிகழ்வுக்கான நடைமுறை வெளியிடப்பட்டுள்ளது. புதுடெல்லி, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றும்பொழுது, வருகிற 5ந்தேதி (நாளை) இரவு 9 மணிக்கு உங்கள் இல்லங்களில் எரியும் அனைத்து விளக்குகளையும் அணைத்து விடுங்கள். உங்கள் வீட்டின் வாசற்படியில் இருந்தோ அல்லது பால்கனியில் இருந்தோ, ஒளியேற்றப்பட்ட மெழுகுவர்த்தி, அகல் விளக்கு, டார்ச் லைட் அல்லது உங்கள் மொபைல் போனின் டார்ச் ஒளியை ஏந்தி 9 நிமிடங்கள் நில்லுங்கள் என கூறினார். இந்த நிகழ்வுக்கான …