டாக்டருக்கு கொரோனா தாக்கியதின் எதிரொலி: மத்திய ரிசர்வ் போலீஸ் படை தலைவர் தனிமைப்படுத்தி கொண்டார்மத்திய ரிசர்வ் படை டாக்டருக்கு கொரோனா வைரஸ் பாதித்து உள்ளதால், அந்த படையின் தலைவர் மகேஷ்வரி தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு வீட்டில் இருந்து பணியாற்றுகிறார். புதுடெல்லி, நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவமான, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தலைவராக இருப்பவர், ஏ.பி.மகேஷ்வரி (வயது 59). இந்தப் படையில் 3.25 லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கு தலைமை பொறுப்பேற்றுள்ள மகேஷ்வரி, 1984-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநில …
பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை; ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம்
பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களுடன் நடந்த சண்டையில் ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம் அடைந்தனர். ஸ்ரீநகர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து குப்வாரா மாவட்டம் கெரான் பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோடு வழியாக இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். இதை கவனித்த எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளை சரணடையும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து இந்திய எல்லைக்குள் நுழையும் நோக்கத்தோடு, வீரர்களை …
நாடு முழுவதும் தினமும் 60 லட்சம் கியாஸ் சிலிண்டர் தடையின்றி வினியோகம் – தர்மேந்திர பிரதான் தகவல்
நாடு முழுவதும் தினமும் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வினியோகிக்கப்படுவதாக தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். புதுடெல்லி, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை மந்திரி தர்மேந்திர பிரதான், அனைத்து ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்களைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மாவட்ட தொடர்பு அதிகாரிகளுடன் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடல் நடத்தினார். இந்த ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தடையில்லாமல் எல்.பி.ஜி. எரிவாயு சிலிண்டர் கிடைப்பது பற்றியும், பிரதமரின் உஜ்வலா திட்டத்தின் கீழ் வரும் 8 கோடி குடும்பத்தினருக்கு 3 …
பிரதமர் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் மக்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்றினர்
பிரதமர் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதுமுள்ள மக்கள் தங்கள் வீடுகளில் இரவு 9 மணியளவில் விளக்குகளை ஏற்றி ஒளியூட்டினர். புதுடெல்லி, உலகையே அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ், இந்தியாவில் வேகமாக பரவ தொடங்கி இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் நோய்க்கிருமி பரவும் வேகத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு நேற்று முன்தினம் உரையாற்றும்பொழுது, வருகிற …
மராட்டியத்தில் மேலும் 26 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
மராட்டியத்தில் மேலும் 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மும்பை, மராட்டிய மாநிலத்தில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 661 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார். புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 26 பேரில், 17 பேர் புனேவைச்சேர்ந்தவர்கள் ஆவர். மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 32 …
முதல்வர் பழனிசாமியுடன் பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியைத் தொடர்பு கொண்டு பேசினார். இதுதொடர்பாக, முதல்வர் பழனிசாமி தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிடுகையில், “வரும் 8-ம் தேதி நடக்கவிருக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் அஇஅதிமுக சார்பில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளார்” என்றார். பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 8-ஆம் தேதி காலை 11 மணியளவில் காணொலிக் காட்சி மூலம் அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் …
ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி
ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என மனிதவள மேம்பாட்டு மந்திரி கூறி உள்ளார். புதுடெல்லி ஏப்ரல் 14 ஆம் தேதி ஊரடங்கு காலம் முடிவடையும் போது நாட்டில் உள்ள கொரோனா வைரஸ் நிலைமை குறித்து ஆய்வு செய்த பின்னரே கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி ரமேஷ் போக்ரியால் தெரிவித்தார். நாட்டில் 21 நாள் ஊரடங்கு ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. …
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டால் சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும்?
கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட சராசரி மனிதனுக்கு சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சென்னை இதய நோய் வந்துவிட்டாலே அடிக்கடி மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகளை நினைத்தும் அதற்கு ஆகும் செலவை எண்ணியுமே பலரும் அதிகம் வருந்துவார்கள். வசதி குறைந்தவர்களாக இருந்தால் சரியான மருத்துவத்தைப் பார்க்க முடியாமல் தவிக்கிறார்கள். இந்த அளவிற்கு இதய நோய்க்கான பரிசோதனை மற்றும் மருத்துவம் ஆடம்பர பொருளாக இருந்தது சாதாரணமாக அடிப்படை பரிசோதனைகளை செய்வதற்கே அதிக செலவாகும். ஆனால் கொரோனா நோய் தொற்று …
ஊரடங்கு காரணமாக உலகம் முழுவதும் சுமார் 40,000 இந்திய கடற்படையினர் சிக்கித் தவிப்பு
ஊரடங்கு காரணமாக உலகம் முழுவதும் சுமார் 40,000 இந்திய கடற்படையினர் சிக்கித் தவிக்கின்றனர் என கடல்சார் அமைப்புகள் தெரிவித்து உள்ளன. புதுடெல்லி உலகெங்கிலும் சுமார் 500 சரக்குக் கப்பல்களில் சுமார் 15,000 கடற்படையினரும், பயண கப்பல்களில் 25,000 பேரும் உள்ளனர். கடல்சார் அமைப்புகள் கப்பல் துறைஅமைச்சகத்துடன் இந்த பிரச்சினையை எழுப்பியுள்ளதாக பி.டி.ஐ-யிடம் தெரிவித்தன. ஊரடங்கு அகற்றப்பட்ட பின்னர் இந்த கடற்படையினரை திரும்பப் பெறுவதற்கான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக கப்பல் துறை உறுதியளித்துள்ளது. “உலகெங்கிலும் சுமார் 40,000 இந்திய …
“உங்களை நினைத்து பெருமைப்படுகிறோம்” ஏர் இந்தியாவுக்கு பாகிஸ்தான் பாராட்டு
கொரோனா வைரஸ் பரவியுள்ள இக்கட்டான சூழ்நிலையில் உங்கள் சேவை பெருமை அளிக்கிறது என ஏர் இந்தியாவுக்கு பாகிஸ்தான் பாராட்டு தெரிவித்துள்ளது. இஸ்லமாபாத், கொரோனா வைரஸ் பரவியுள்ள இக்கட்டான சூழ்நிலையில் உங்கள் சேவை பெருமை அளிக்கிறது என ஏர் இந்தியாவுக்கு பாகிஸ்தான் பாராட்டு தெரிவித்துள்ளது. கொரோனா நோய் தொற்று பரவி வரும் இந்த நேரத்தில் மக்களையும், நிவாரண பொருட்களையும், உலகளாவிய அளவில் கொண்டு சென்று சேவைபுரிந்து வரும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் …