அமெரிக்காவில் 4 வயது புலிக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யபட்டுள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹூபேய் மாகாணம் வூஹானில் பரவத்தொடங்கிய கரோனாவின் கோரத்தாண்டவத்துக்கு உலகம் முழுவதும் 216க்கும் மேற்பட்ட நாடுகளில் 69 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலி வாங்கியுள்ளது. இதுவரை 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வல்லரசு நாடான அமெரிக்காவில் தான் கரோனா தற்போது அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு சுமார் 336,673 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மனித சமூகத்தை …
ஊரடங்கு அமலில் இருப்பதால் தமிழகத்தில் மின்சார தேவை 5 ஆயிரம் மெகாவாட் குறைந்தது – அமைச்சர் பி.தங்கமணி தகவல்
ஊரடங்கு உத்தரவு காரணமாக, தமிழகத்தில் தினசரி மின்சாரத்தின் தேவை 5 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு குறைந்துள்ளது என மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி கூறினார். சென்னை, இதுகுறித்து, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் தினசரி மின்சாரத்தின் தேவை குறைந்துள்ளது. தற்போதைய காலக்கட்டத்தில் நாளொன்றுக்கு 16 ஆயிரம் …
கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் சமூக தொற்றுநிலையை அடைந்துவிட்டதா? – சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி
கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் சமூக தொற்று நிலையை அடைந்து விட்டதா என்பது கட்டுப்படுத்துதல் திட்டம் முடிந்த பின்னரே தெரியவரும் என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். சென்னை, தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் நேற்று சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 571 ஆக …
அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் 8-ந் தேதி நடக்கிறது; எடப்பாடி பழனிசாமிக்கு, பிரதமர் மோடி அழைப்பு
அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் வரும் 8-ந் தேதி நடைபெறவுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்தார். சென்னை, உலக நாடுகளைப் போன்று, இந்தியாவிலும் கொரோனா நோய் பரவி வருவதை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திரமோடி அவ்வப்போது மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக, வரும் 8-ந் தேதி (புதன்கிழமை) அனைத்து …
மோடியிடம் உதவி கேட்ட டிரம்ப் – ‘கொரோனா சிகிச்சைக்கான மருந்தை அமெரிக்காவுக்கு வழங்குங்கள்’
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு விற்பனை செய்யுமாறு பிரதமர் மோடியை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கேட்டுக் கொண்டார். வாஷிங்டன், உயிர்க்கொல்லி தொற்று நோயான கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான முயற்சியில் அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்றபோதிலும், மலேரியா காய்ச்சலை குணப்படுத்த உதவும் ஹைட்ரோகுளோரோகுயின் மருந்து கொரோனா நோயாளிகளை குணப்படுத்த உதவுவதாக கண்டறியப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து கொரோனா …
ரஷியாவில் பயங்கரம்: சத்தமாக பேசியதால் 5 பேரை சுட்டுக்கொன்ற வாலிபர்
ரஷியாவில் வாலிபர் ஒருவர், சத்தமாக பேசியதால் 5 பேரை சுட்டுக்கொன்றார். மாஸ்கோ, ரஷியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அந்த நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தலைநகர் மாஸ்கோவில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள ரியாசான் பிராந்தியம் முடக்கப்பட்டு இருக்கிறது. மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இந்த …
கொரோனா வைரசுக்கு நியூயார்க் மாகாணத்தில் 2 நிமிடத்துக்கு ஒருவர் வீதம் சாவு
நியூயார்க் மாகாணத்தில் கொரோனா வைரசுக்கு 2½ நிமிடத்துக்கு ஒருவர் வீதம் பலியாகி வருகின்றனர். வாஷிங்டன், அமெரிக்காவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி வருகிறது. பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. நியூயார்க் மாகாணம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை எட்டியது. நோய் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1½ லட்சத்தை நெருங்கி வருகிறது. நியூஜெர்சி, மிச்சிகன், கலிபோர்னியா, லூசியானா, புளோரிடா, மசாசுசெட்ஸ், பென்சில்வேனியா ஆகிய …
உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 65 ஆயிரத்து 605 ஆக உயர்ந்து உள்ளது. புதுடெல்லி, சீனாவில் இருந்து 199க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 65 ஆயிரத்து 605 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்து 14 ஆயிரத்து 487 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 2 லட்சத்து 53 ஆயிரத்து 626 பேர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளனர். 8 …
தேவைப்பட்டால், ஹைட்ராக்ஸி குளோரோகுயினை நானும் உட்கொள்வேன்-டொனால்டு டிரம்ப்
தேவைப்பட்டால், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரையை நானும் உட்கொள்வேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார். வாஷிங்டன்: அமெரிக்காவில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் மற்றும் 8,000 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. எந்தவொரு சிகிச்சையும் இல்லாத கொடிய கொரோனா வைரஸ் நோயால் மோசமாக பாதிக்கப்பட்டவர்களாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது. இதுவரை உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள், 64,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்ற மற்றும் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் 12 லட்சம் …
காற்று மாசு குறைவால் 200 கி.மீ. தொலைவுக்கு தெரிந்த இமயமலை
ஜலந்தர் பகுதியில் காற்று மாசு குறைந்திருப்பதால் தவுலதார் மலைத்தொடரின் எழில்மிகு தோற்றம் கண்ணுக்கு தெரிந்துள்ளது. சண்டிகார், பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ளது ஜலந்தர் நகரம். இமாசல பிரதேச எல்லை அருகே அமைந்துள்ள இந்த நகரில் இருந்து சுமார் 213 கி.மீ. தொலைவில் இமயமலையின் தவுலதார் மலைத்தொடர் இருக்கிறது. பனியால் சூழப்பட்ட இந்த மலைத்தொடரின் ரம்மியமான காட்சியை ஜலந்தர் பகுதியில் வசிக்கும் இன்றைய தலைமுறையினர் கண்டிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அதிகரித்துள்ள காற்று மாசு, அந்த மலைத்தொடரை மறைத்துவிட்டது. சுமார் 25 …