சென்னை: கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பல்வேறு தொழில்கள் முடங்கி உள்ளன. உணவு, பால், மருந்து போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு எந்த தடையும் இல்லை. எனினும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு சலுகைகள் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- காய்கறிகள் மற்றும் பழங்களை குளிர்பதன கிடங்குகளில் பாதுகாப்பதற்கான பயன்பாட்டு கட்டணம் ஏப்ரல் 30 வரை வசூலிக்கப்படாது. காய்கறிகள் …
கரோனாவை எதிர்கொள்ள நன்கொடை: முதல்வர் வேண்டுகோள்
கரோனா வைரஸ் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தொழிலதிபர்கள், முன்னனி தனியார் நிறுவனங்கள் மற்றும் தமிழக மக்களின் பங்களிப்பை தமிழக அரசு நாடுகிறது என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கரோனா வைரஸ் தொற்றிலிருந்து தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றது. மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு குடும்பத்தின் நலனை பாதுகாக்கும் பொருட்டு, நிதி உதவி …
நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைப்பு: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தகவல்
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நீட், ஜே.இ.இ., உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. கரோனா பரவல் எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அனைத்துத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. முன்னதாக பொதுத்தேர்வு தவிர மற்ற வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவார்கள் என பல்வேறு மாநில பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. …
மஹாராஷ்டிராவில் 868 பேருக்கு கொரோனா, 52 பேர் பலி
மும்பை: இந்தியாவில் கொரோனா பரவ துவங்கியுள்ள நிலையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் இதுவரை நோய் தொற்றால் 868 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். மொத்தம் 52 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் மஹாராஷ்டிரா, கொரோனா பாதிப்பை பொறுத்த வரை தொடர்ந்து நாட்டில் முதலிடத்தில் இருந்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க கடந்த 13 நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையிலும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 120 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். ஒரே …
இஷ்டம் போல மருந்து சிபாரிசு: ஆயுஷ் அமைச்சகம் திடீர் தடை
சென்னை :கொரோனா வைரஸ் ஒழிப்பு சிகிச்சைக்கு, பாரம்பரிய மருத்துவ முறைகளை பரிந்துரைத்து பிரசாரம் செய்ய, ஆயுஷ் அமைச்சகம் தடை விதித்துள்ளது.உலகம் முழுவதும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள், போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன. இந்தியாவில், 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சையும், மற்றவர்களுக்கு தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு, மருத்துவர்கள் அல்லாத பலர், பல்வேறு சிகிச்சை முறைகளை, சமூக வலைதளங்கள் வழியாக பரப்பி வருகின்றனர். இதில் பல, …
கரோனா பாதித்தவா்களை களங்கப்படுத்த வேண்டாம்: சுகாதாரத் துறைச் செயலா் வேண்டுகோள்
கரோனா பாதித்தவா்களுக்கு களங்கம் கற்பிக்கும் நடவடிக்கைகளில் யாரும் ஈடுபட வேண்டாம் என சுகாதாரத் துறைச் செயலா் பீலா ராஜேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளோா். தில்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 574 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அதுதொடா்பாக பல்வேறு விமா்சனங்களும், கருத்துகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அதைக் குறிப்பிடும் வகையிலேயே பீலா ராஜேஷ் இத்தகைய கருத்தை தெரிவித்தாா். சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: கரோனா என்பது எவருக்கு வேண்டுமானாலும் …
14-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? – எடப்பாடி பழனிசாமி பதில்
1 லட்சம் கொரோனா நோய் பரிசோதனை கருவிகள் விரைவில் கொள்முதல் செய்யப்படும் என்று தெரிவித்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வருகிற 14-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா? என்பதற்கும் பதில் அளித்துள்ளார். சென்னை, தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட கலெக் டர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் ஆய்வு மேற்கொண்டார். …
கொரோனா நோயின் தன்மை அறிந்தே 10-ம் வகுப்பு தேர்வு தேதி அறிவிக்கப்படும் – எடப்பாடி பழனிசாமி பேட்டி
கொரோனா நோயின் தன்மை அறிந்தே 10-ம் வகுப்பு தேர்வு தேதி அறிவிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சென்னை, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதயவது:- ஏற்கனவே 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. அது முடிந்த பிறகுதான் இந்த நோயின் தன்மை அறிந்துதான் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக முடிவு செய்து அதற்கேற்றவாறு தேதி அறிவிக்கப்படும். தனியார் பள்ளிகள் அடுத்த கல்வியாண்டிற்கான கட்டணத்தை …
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3-ம் கட்டத்துக்கு செல்லாமல் தடுக்க நடவடிக்கை – சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் பேட்டி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3-ம் கட்டத்துக்கு செல்லாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் கூறினார். சென்னை, சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சென்னை வேளச்சேரி வணிக வளாகத்தில் வேலை செய்த அரியலூர் பெண்ணிடம் தொடர்பில் இருந்த 500 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர். அவர்களில் யாருக்கும் இதுவரை எந்த ஒரு அறிகுறியும் இல்லை. டெல்லி …
கொரோனா தடுப்பு பணியில் உள்ள அரசு ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டால் ரூ.2 லட்சம் கருணைத் தொகை – இலவச சிகிச்சையும் வழங்க அரசு உத்தரவு
கொரோனா பரவல் தடுப்பு பணியில் உள்ள அரசு ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டால், அவர்களுக்கு ரூ.2 லட்சம் கருணைத் தொகையும், இலவச சிகிச்சையும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை, தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- கொரோனா தடுப்பு, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பது, தனிமைப்படுத்துவது மற்றும் சிகிச்சை அளிப்பது ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ள சுகாதாரத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, காவல்துறை அதிகாரிகள், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணியாற்றும் …