ஆப்கானிஸ்தானில் இரண்டு பழங்குடியின பிரிவு மக்களுக்கு இடையே நடந்த மோதலில் 13 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான்: பழங்குடியினர்களுக்கு இடையே மோதல் – 13 பேர் பலி காபுல்: ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நிலவி வருகிறது. அந்நாட்டின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாதிகள் அரசுப்படையினருக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அதேபோல், ஆப்கானிஸ்தானில் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு கலாச்சாரங்களை பின்பற்றும் பல தரப்பட்ட பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் ஒரு …
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 14 லட்சத்தை தாண்டியது- ஒரே நாளில் 7000 பேர் பலி
உலகம் முழுவதும் 14 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் சுமார் 7000 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 14 லட்சத்தை தாண்டியது- ஒரே நாளில் 7000 பேர் பலி ஜெனிவா: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 209 நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்திவருகிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு …
குணம் அடைந்த 51 பேருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு – தென்கொரியாவில் அதிர்ச்சி
தென்கொரியாவில் குணம் அடைந்த 51 பேருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குணம் அடைந்த 51 பேருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு – தென்கொரியாவில் அதிர்ச்சி சியோல்: தென்கொரியாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான டாயிகு, கொரோனா தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த 51 பேர் குணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டு அண்மையில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர், அவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து …
பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் இன்று கொரோனா தடுப்பூசி பரிசோதனை
பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் இன்று கொரோனா தடுப்பூசி பரிசோதனை தொடங்கப்பட்டு உள்ளது. வாஷிங்டன் சீனாவில் உருவாகி மற்ற நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 13 லட்சத்தை தாண்டியுள்ளது. இதேபோல் பலியானவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 3.67 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 10,871 ஆக உள்ளது. …
தமிழகத்திற்கு நல்ல செய்தி: 10 மாத குழந்தை உள்பட 5 பேர் கொரோனா சிகிச்சையில் குணமடைந்தனர்
தமிழகத்திற்கு நல்ல செய்தி: 10 மாத குழந்தை உள்பட 5 பேர் கொரோனா சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். கோவை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று 621 ஆக உயர்ந்து உள்ளது.கொரோனா பாதிப்பால் 6 பேர் உயிர் இழந்து உள்ளனர். இந்நிலையில் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 10 மாத குழந்தை உட்பட 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் …
நாள் தோறும் 1000 பாதுகாப்பு கருவிகள்: ரயில்வே முடிவு
புதுடில்லி: கொரோனா வைரசில் இருந்து பாதுகாக்கும் வகையில் நாள் தோறும் 1000 பாதுகாப்பு கருவிகளை உற்பத்தி செய்ய இந்திய ரயில்வே முடி வு செய்துள்ளது. இது குறித்து இந்திய ரயில்வே தெரிவித்து இருப்பதாவது: நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்திற்கும மேல் உள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 114 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் நோய்க்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மருத்து பணியாளர்களை பாதுகாக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. இதனையடுத்து நாடு …
12 வகையான தொழிற்சாலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி
சென்னை: இரும்பு, சிமெண்ட், மருந்து, உரம் உள்ளிட்ட 12 வகையான தொழிற்சாலைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் 12 வகையான தொழிற்சாலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இரும்பு, சிமெண்ட், சுத்திகரிப்பு. சர்க்கரை, காகிதம், ரசாயனம், ஜவுளித்துறை, உரம், உருக்கு, கண்ணாடி, ஃபவுண்டரி உட்பட 12 துறைகளை சேர்ந்த தொழிற்சாலைகள் இயங்க …
மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு- காயல்பட்டணம் அரசு மருத்துவமனை மூடல்
மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் காயல்பட்டணம் அரசு மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 200 குடும்பத்தினர் கண்காணிப்பில் உள்ளனர். மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு- காயல்பட்டணம் அரசு மருத்துவமனை மூடல் ஆறுமுகநேரி: டெல்லியில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட தமிழகத்தை சேர்ந்த ஏராளமானோருக்கு கொரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தை சேர்ந்த 2 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் காயல்பட்டணம் …
ஒடிசாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்பட 4 பேரை மிதித்து கொன்ற ஒற்றை யானை
ஒடிசாவில் யானை தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்பட 4 பேர் பலியான சம்பவம் கிராம மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. ஒடிசாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்பட 4 பேரை மிதித்து கொன்ற ஒற்றை யானை புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் யானைகள் ஊருக்குள் புகும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இந்தநிலையில் அங்குள்ள பராகர் மாவட்டத்தின் பத்மபூர் நகருக்கு அருகே உள்ள ராஜபாதா சாஹி என்ற கிராமத்தில் 75 வயதான முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் …
காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் – சிஆர்பிஎப் வீரர் மரணம்
காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் உயிரிழந்தார். காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் – சிஆர்பிஎப் வீரர் மரணம் ஸ்ரீநகர்: காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பிஜ்பேஹரா பகுதியில் சிஆர்பிஎப் மையம் செயல்பட்டு வருகிறது. இன்று மாலை அப்பகுதியில் திடீரென நுழைந்த பயங்கரவாதிகள் அந்த மையத்தில் இருந்த சிஆர்பிஎப் வீரர்கள் மீது கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் …