கொல்கத்தாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண் குழந்தைகள் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினர். கொல்கத்தா, கொல்கத்தா நகரில் உள்ள பொலியகாட்டா ஐ.டி. ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் 28-ந்தேதி 2 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டார்கள். ஒன்று 9 மாத பெண் குழந்தை, இன்னொன்று 6 வயது பெண் குழந்தை. இருவரும் சகோதரிகள். 2 பேருக்கும் கொரோனா தொற்று இருந்தது. அவர்களின் தாயும் உடன் இருந்தார். ஆனால் அவருக்கு வைரஸ் தொற்று இல்லை. இருந்தாலும் குழந்தைகளுக்காக அவரும் தனி வார்டில் இருந்தார். …
எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை
கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எதிர்க்கட்சி தலைவர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். புதுடெல்லி, உலகம் முழுவதும் சுமார் 184 -க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் வியாபித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளியைய பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வருகிறது. இதனால், 40- க்கும் மேற்பட்ட நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. …
மே 15-ந்தேதி வரை பள்ளி- கல்லூரிகள் திறக்கப்படாது?
பள்ளிகள், கல்லூரிகளை திறப்பதை மே 15 வரை நீட்டிக்கவும், அமைச்சர்கள் குழு பரிந்துரைத்து உள்ளது புதுடெல்லி இந்தியாவில் கொரோனா காட்டுத்தீ போல் வேகமாக பரவ தொடங்கியதால், அதை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் மோடி கடந்த 24-ந் தேதி இரவு அறிவித்தார். ஊரடங்கு அமலுக்கு வந்தபோது இந்தியாவில் கொரோனாவால் 519 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். 9 பேர் உயிரிழந்து இருந்தனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நேற்றுடன் 14 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், …
இங்கிலாந்தில் கொரோனா பரவலுக்கு 5ஜி நெட்வொர்க் காரணமா? – செல்போன் கோபுரங்களை மக்கள் கொளுத்தினர்
இங்கிலாந்தில் கொரோனா பரவலுக்கு 5ஜி நெட்வொர்க் காரணம் என்று பரவிய வதந்தியால், அங்கு சுமார் 20 செல்போன் கோபுரங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. லண்டன், இங்கிலாந்தில் 51 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 ஆயிரத்து 300-க்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், அங்கு சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5ஜி நெட்வோர்க் சேவையை தொடங்கி உள்ளன. அதே சமயத்தில், 5ஜி நெட்வொர்க், கொரோனா வைரஸ் பரவலை மேலும் அதிகரிப்பதாக இங்கிலாந்தில் வதந்தி கிளம்பியது. இதையடுத்து, செல்போன் …
இங்கிலாந்தில் கொரோனா வைரசுக்கு இந்திய டாக்டர் பலி
இங்கிலாந்தில், இந்திய இதய அறுவை சிகிச்சை நிபுணர், கொரோனா வைரசுக்கு பலியானார். லண்டன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஜிதேந்திர குமார் ரத்தோட் என்பவர், இங்கிலாந்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்தார். அவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, கர்டிப் நகரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். ஜிதேந்திர குமார் ரத்தோட், இந்தியாவில் மருத்துவம் …
கொரோனாவுக்கு தமிழகத்தில் மேலும் ஒருவர் பலி
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு வேலூரில் ஒருவர் உயிரிழந்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு தமிழகத்தில் மேலும் ஒருவர் பலி வேலூர்: உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 4789 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 124 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்திலும் கொரோனா தீவிரமடையத் தொடங்கியுள்ளது. வைரஸ் பரவுவதை தடுக்க மாநில அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. …
குஜராத்: பிறந்து 14 மாதமே ஆன பச்சிளம் குழந்தை கொரோனாவுக்கு பலி – அதிர்ச்சி சம்பவம்
குஜராத் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பிறந்து 14 மாதங்களே நிரம்பிய பச்சிளம் குழந்தை உயிரிழந்துள்ளது. குஜராத்: பிறந்து 14 மாதமே ஆன பச்சிளம் குழந்தை கொரோனாவுக்கு பலி – அதிர்ச்சி சம்பவம் அகமதாபாத்: உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 4789 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 124 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், குஜராத் மாநிலம் ஜம்நகர் மாவட்டத்தை ஒரு தம்பதியின் 14 மாத …
மத்திய அரசு செலவை குறைக்க வேண்டும் – பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்
கொரோனாவால் நாட்டில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால், மத்திய அரசு தனது செலவினங்களை குறைக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதி இருக்கிறார். மத்திய அரசு செலவை குறைக்க வேண்டும் – பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம் புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி பாதிப்பை ஏற்படுத்த தொடங்கிய பிறகு, அது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு ஏற்கனவே 3 கடிதங்கள் எழுதி இருக்கிறார். இந்த நிலையில், …
கொரோனா தடுப்புக்கு புதிய திட்டங்கள்: கெஜ்ரிவால்
டெல்லியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு புதிய திட்டங்கள் தீட்டப்பட்டு இருப்பதாக முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். கொரோனா தடுப்புக்கு புதிய திட்டங்கள்: கெஜ்ரிவால் புதுடெல்லி : டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆன்லைனில் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த 5 முக்கிய திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். இந்த திட்டத்துக்கு 5 டி என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன்படி பரிசோதனை செய்தல், கண்டுபிடித்தல், சிகிச்சை அளித்தல், குழுவாக பணியாற்றுதல், தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல் …
கொரோனாவில் இருந்து குணமடைந்த 3 லட்சம் பேர்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 3 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்த 3 லட்சம் பேர் ஜெனிவா: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளுக்கும் (202 நாடுகள்) இந்த வைரஸ் வேகமாக பரவி அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். …