கொரோனா வைரஸ் பாதிப்பால் ரெயில்கள் சரக்குகளை ஏற்றிச்செல்வதற்கான வருமானம் ரூ.2,125 கோடி அளவுக்கு குறைந்து விட்டது. புதுடெல்லி, உலக நாடுகளை கதிகலங்க வைத்து வரும் கொரோனா வைரஸ், நமது நாட்டையும் விட்டு வைக்கவில்லை. தீவிரமாக பரவி வருகிற இந்த வைரசை தடுப்பதற்காக 21 நாள் ஊரடங்கு உத்தரவு போட்டுள்ளதால் அனைத்து தொழில் நடவடிக்கைகளும் முடங்கி உள்ளன. பொருளாதாரம் நிலை குலைந்துபோய் உள்ளது. இது ரெயில்வே துறையிலும், அதுவும் சரக்கு கையாளுதல் துறையிலும் எதிரொலித்துள்ளது. பிப்ரவரி மாத நிலவரப்படி, …
ஆய்வுக்கூடங்களில் கொரோனாவை கண்டறிய இலவச பரிசோதனை – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
புதுடெல்லி, கொரோனோ வைரஸ் பரிசோதனைக்காக தனியார் ஆய்வகங்கள் வசூலிக்கும் கட்டணம் தொடர்பாக சஷாங் தியோ சுதி என்ற வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், கொரோனா தொற்றை கண்டறியும் பரிசோதனைக்காக தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆய்வகங்கள் 4,500 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் கூறி இருப்பதாகவும், ஆனால் இந்த தொகை சாமானிய மக்களுக்கு மிகவும் அதிகம் என்றும், எனவே கட்டணம் இல்லாமல் இலவசமாக பரிசோதனை …
14.7 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம்- தமிழக அரசு ஆணை
தமிழகத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள 14.7 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 வழங்குவதற்கான ஆணையை அரசு பிறப்பித்து உள்ளது. 14.7 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம்- தமிழக அரசு ஆணை தமிழ்நாடு அரசு சென்னை: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது. கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு தீவிர பணியாற்றி வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்கள் அமலில் உள்ளது. இந்த உத்தரவு கடந்த …
ஊரடங்கு உத்தரவு அமல் : 21-ந் தேதிக்கு முன்பாக எங்கும் நகர வேண்டாம் – எல்லை பாதுகாப்பு படையினருக்கு அதிரடி உத்தரவு
ஊரடங்கு உத்தரவு எதிரொலியாக எல்லை பாதுகாப்பு படையினர், வருகிற 21-ந் தேதிக்கு முன்னதாக எங்கும் நகர வேண்டாம் என்று அதிரடி உத்தரவு போடப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமல் : 21-ந் தேதிக்கு முன்பாக எங்கும் நகர வேண்டாம் – எல்லை பாதுகாப்பு படையினருக்கு அதிரடி உத்தரவு எல்லை பாதுகாப்பு படை புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பொதுமக்கள் வீடுகளுக்குள் இருக்கும் வகையில் கடந்த மாதம் 25-ந் தேதி முதல் 21 நாள் ஊரடங்கு …
கொரோனாவை விரட்ட எல்இடி சார்ந்து இயங்கும் இயந்திரம் கண்டறிந்த ஐஐடி மாணவர்கள்
கொரோனா நோய் தொற்றை விரட்டியடிக்க எல்இடி சார்ந்து இயங்கும் இயந்திரம் ஒன்றை ஐஐடி குழு கண்டறிந்து இருக்கிறது. கொரோனாவை விரட்ட எல்இடி சார்ந்து இயங்கும் இயந்திரம் கண்டறிந்த ஐஐடி மாணவர்கள் பொதுவெளியில் கிருமி நாசினி தெளிக்கப்படும் காட்சி ஐஐடியை சேர்ந்த குழு ஒன்று எல்இடி சார்ந்து இயங்கும் இயந்திரத்தை குறைந்த விலையில் உருவாக்கி இருக்கிறது. இந்த இயந்திரத்தை பயன்படுத்தி மருத்துவமனை, பேருந்து மற்றும் ரெயில்களின் தரையில் உள்ள கிருமிகளை கொன்று கொரோனா தொற்று பரவுவதை தடுக்க முடியும். …
ஊரடங்கு உத்தரவை மீறியதால் நியூசிலாந்து சுகாதாரத்துறை மந்திரி பதவியிறக்கம்
நியூசிலாந்தில் ஊரடங்கு உத்தரவை மீறி தனது குடும்பத்துடன் கடற்கரையில் காரில் உலா வந்த சுகாதாரத்துறை மந்திரி டேவிட் கிளார்க் இணை சுகாதாரத்துறை மந்திரியாக பதவியிறக்கம் செய்யப்பட்டார். ஊரடங்கு உத்தரவை மீறியதால் நியூசிலாந்து சுகாதாரத்துறை மந்திரி பதவியிறக்கம் டேவிட் கிளார்க் வெலிங்டன்: நியூசிலாந்தில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்ததை தொடர்ந்து, கடந்த மாதம் 25-ந்தேதி அங்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எதற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டது. …
மோடி ‛கிரேட், ரியலி குட்’: டிரம்ப் திடீர் பாராட்டு
வாஷிங்டன்: ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தினை ஏற்றுமதி செய்யவில்லை எனில் அதற்கான விளைவை இந்தியா சந்திக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்த நிலையில், தற்போது, மோடி கிரேட், ரியலி குட் என பாராட்டியுள்ளார். உலகளவில் 70 சதவீத ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து உற்பத்தி இந்தியாவில் தான் செய்யப்படுகிறது. இந்த மருந்து கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படலாம் என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அறிவித்துள்ளது. மலேரியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் இந்த மருந்தினால் கொரோனா தொற்றை எதிர்கொள்ள முடியுமா என்று …
40 கோடி இந்தியர்கள் வறுமையில் மூழ்கும் அபாயம்: ஐ.நா எச்சரிக்கை
புதுடில்லி: உலக தொழிலாளர்கள் அமைப்பு இன்று (ஏப்., 8) வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் காரணமாக போடப்பட்டுள்ள, ஊரடங்கு உத்தரவால் உலகம் முழுக்க 270 கோடி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 கோடி இந்திய முறைசாரா தொழிலாளர்கள், வறுமையின் பிடியில் சிக்கும் அபாயம் உள்ளது என எச்சரித்துள்ளது. மேலும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரஸால், ஏற்கனவே லட்சக்கணக்கான முறைசாரா தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு மற்றும் பிற கட்டுப்பாடுகள் காரணமாக, இந்தியா, நைஜீரியா, பிரேசில் ஆகிய நாட்டின் தொழிலாளர்கள் …
ராமாயணத்தை மேற்கோள்காட்டி மோடியிடம் உதவி கேட்ட பிரேசில் அதிபர்
புதுடில்லி: அனுமன் சஞ்சீவி மூலிகையை கொண்டுவந்து லக்ஷ்மன் உயிரை காப்பாற்றியது போல இந்தியா ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை வழங்கி பிரேசில் மக்களை காக்க வேண்டும் என பிரேசில் அதிபர் ஜெயிர் போல்செனாரோ பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் மோடிக்கு, ஜெயிர் போரல்செனரோ எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: கடவுள் ராமரின், சகோதரரான லட்சுமணரை காப்பாற்ற, கடவுள் அனுமன், இமயமலையில் இருந்து புனித மருந்தை எடுத்து வந்தார். அதேபோல, இயேசு, நோயுள்ளவர்களை, தன் ஆற்றலால் குணப்படுத்தினார். தற்போது கொரோனாவால், …
ஊரடங்கை நீட்டிக்க மாநில அரசுகள் பரிந்துரை: பிரதமர்
புதுடில்லி: ஏப்.,14க்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என மாநில அரசுகள் பரிந்துரை செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் குறித்து பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்சிங் முறையில், எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: அனைத்து கட்சி தலைவர்கள் ஆலோசனைகள், பரிந்துரை வழங்கினர். ஊரடங்கு குறித்து விவாதிக்கப்பட்டது. ஒவ்வொருவரின் உயிரை காப்பாற்ற வேண்டியது அரசின் பொறுப்பு. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, உலகமே, கடுமையான …