நாட்டின் சில இடங்களில் ஊரடங்கை தளர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கலாம் என்று என்று பிரதமர் மோடிக்கு சரத்பவார் யோசனை தெரிவித்தார். மும்பை, நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற குழுத் தலைவர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் கொரோனா தொடர்பாக ஆலோசனைகள் வழங்கி பேசியதாவது:- கொரோனாவுக்கு எதிரான போராட்டம் நீண்ட கால போராட்டம் ஆகும். இது …
போரிஸ் ஜான்சன் உடல்நிலை சீராக உள்ளது- இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் தகவல்
போரிஸ் ஜான்சன் உடல்நிலை சீராக உள்ளது. அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார் என்று இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. லண்டன், போரிஸ் ஜான்சன் உடல்நிலை சீராக உள்ளது. அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார் என்று இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. இங்கிலாந்தில் 55 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 6 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர் …
போர்க்கப்பலில் 114 மாலுமிகளுக்கு கொரோனா: அமெரிக்க கடற்படை தலைவர் ராஜினாமா
போர்க்கப்பலில் 114 மாலுமிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அமெரிக்க கடற்படை தலைவர் தாம்ஸ் மோட்லி தனது பதவியை ராஜினாமா செய்தார். வாஷிங்டன், அணுசக்தியில் இயங்கும் அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலான தியோடர் ரூஸ்வெல்டில் பணியாற்றும் 114 மாலுமிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த கப்பல் குவாம் தீவில் உள்ள கடற்படை தளத்தில் தனிமைப்படுத்தி நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த கப்பலின் தலைமை அதிகாரி குரோஷியர் ஊடகத்துக்கு எழுதிய கடிதம் …
ஆப்கானிஸ்தான் ராணுவம் அதிரடி: தலீபான் பயங்கரவாதிகள் 37 பேர் கொன்று குவிப்பு
ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 37 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். காபூல், ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும், அமெரிக்க அரசுக்கும் இடையே வரலாற்று சிறப்பு மிக்க அமைதி ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் கையெழுத்தானது. ஆனால் ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலீபான்களுக்கும் இடையே முறையான உடன்பாடு ஏற்படாததால் இந்த அமைதி ஒப்பந்தத்தால் எந்த பலனும் கிட்டவில்லை. தலீபான் கைதிகளை விடுதலை செய்யும் …
கொரோனா வைரஸ் சூழ்நிலையை பணம் சம்பாதிக்க பயன்படுத்துவதா? – போப் ஆண்டவர் பிரான்சிஸ் கண்டிப்பு
கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலையும் தங்களுக்கு சாதகமாக்கி பணம் சம்பாதிப்பவர்களை போப் ஆண்டவர் பிரான்சிஸ் கண்டித்தார். ரோம், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மிகக் கடுமையாக ஆளாகியுள்ள நாடுகளில் ஒன்று இத்தாலி. அங்கு இந்த வைரசுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. பலியானோர் எண்ணிக்கையும் 17 ஆயிரத்தை கடந்து விட்டது. அங்கு கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் சமூக குற்றங்களும் பெருகி வருகின்றன. சமூக மற்றும் பொருளாதார இடையூறுகளை சரிக்கட்டுகிற …
ருமேனிய ஆஸ்பத்திரியில் விபரீதம்: பிறந்த குழந்தைகள் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு
ருமேனிய ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகள் 10 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புச்சாரெஸ்ட், சீனாவின் உகான் நகரில் முதன் முதலில் பரவிய கொரோனா வைரஸ் சாதி, மதம், ஏழை, பணக்காரர் என்ற பேதமின்றி அனைத்து தரப்பினரையும் பலி வாங்கி வருகிறது. அது பிறந்த குழந்தைகளைக் கூட விட்டு வைப்பதில்லை. இதை உறுதிப்படுத்துவதுபோல் ஐரோப்பிய நாடான ருமேனியாவில் பிறந்த குழந்தைகள் 10 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி, உலகம் முழுவதும் பெரும் …
ராமாயணத்தில் அனுமன், பைபிளில் இயேசு போல் இந்தியா உதவ வேண்டும் – பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் கடிதம்
ராமாயணத்தில் அனுமன் போலவும், பைபிளில் இயேசு போலவும் இந்தியா உதவ வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் பிரேசில் அதிபர் குறிப்பிட்டுள்ளார். பிரேசிலியா, சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது, அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக உலகம் முழுவதும், 14 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 86 ஆயிரத்து 744 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 3 லட்சத்து 16 ஆயிரத்து 855 பேர் குணமடைந்து வீடு …
கொரோனா வைரஸ்:காசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு விகிதம் 6 மடங்கு குறைவு
காசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்திவரும் இந்தியா உள்பட நாடுகளில் கொரோனா வைரசால் இறப்பு விகிதம் 6 மடங்கு அளவுக்கு குறைவாக காணப்படுகிறது என ஆய்வில் தெரிய வந்து உள்ளது. லண்டன் காசநோயிலிருந்து பாதுகாப்பதற்காக பிறந்த உடனேயே லட்சகணக்கான இந்திய குழந்தைகளுக்கு வழங்கப்படும் பேசிலஸ் கால்மெட்-குய்ரின் (பி.சி.ஜி) தடுப்பூசி, கொடிய கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு கேம் ஜேஞ்சராக இருக்கக்கூடும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கூறி உள்ளனர் அமெரிக்கா மற்றும் இத்தாலியில் கொரோனா தாக்கத்தின் தீவிரம் காரணமாக …
ஊரடங்கால் 40 கோடி முறைசார தொழிலாளர்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள் – ஐ.நா.எச்சரிக்கை
ஊரடங்கால் 40 கோடி முறைசார தொழிலாளர்கள் வறுமையில்தள்ளப்படுவார்கள் என ஐ.நா.வின் தொழிலாளர் அமைப்பு எச்சரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் இந்தியாவில் முறைசாரா தொழிலாளர்கள் சுமார் 40 கோடி பேர் வறுமையில் தள்ளப்படும் அபாயத்தில் உள்ளனர், மேலும் உலகளவில் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில், 19.5 கோடி முழுநேர வேலைகள் அல்லது வேலைநேரத்தின் 6.7 சதவீதம் அழிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரபு நாடுகளில் (8.1 சதவீதம், 5ஒ லடசம் முழுநேர தொழிலாளர்களுக்கு சமம்), ஐரோப்பா (7.8 சதவீதம், அல்லது 1.2 …
கொரோனா வைரஸ் பாதிப்பு: முதல் முறையாக அறிக்கை வெளியிட்ட சீனா
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சீனா முதல் முறையாக அறிக்கை வெளியிட்டு உள்ளது. பெய்ஜிங் சீனாவின் உகான் நகரத்தில் காணப்பட்ட இந்த கொரோனா வைரஸால் இப்போது உலகமே கதிகலங்கி நிற்கிறது. பல்வேறு நாடுகளில் தினந்தோறும் உயிரிழப்புகள் ஏற்பட்டு கொண்டு தான் இருக்கிறது.கொரோனா விவகாரத்தை பொறுத்தவரை சீனா தகவல்களை மூடி மறைப்பதாகவும், அதன் மூலம் இன்று உலக நாடுகள் அனைத்தையும் இன்னலில் மாட்டி விட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதல் அதை தடுக்க …