கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் அரசு பணியாளர் மரணமடைந்தால் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் அரசு பணியாளர் மரணமடைந்தால் அவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை, இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு எடுத்து வருகிறது. இரவு பகல் பாராது, தங்கள் உயிரையும் துச்சம் என நினைத்து, பொதுமக்களை காப்பாற்றும் சீரிய பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், …

வெளிமாநில தொழிலாளர்கள் விவரம் கணக்கெடுப்பு – மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு

தமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை கணக்கெடுத்து அனுப்பும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை, கொரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், வெளிமாநிலத்தில் இருந்து பிழைப்புக்காக தமிழகத்துக்கு வந்த தொழிலாளர்களின் நிலை பரிதாபமாகிவிட்டது. அவர்களுக்கான அடிப்படை தேவைகளை வேலைக்கு அமர்த்தியவர்களே செய்து தர வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. எல்லா மாநிலங்களிலும் இதுபோன்ற பிரச்சினை இருப்பதை கருத்தில் கொண்டு, வெளிமாநிலங்களில் இருந்து பிழைப்புக்காக வந்த தொழிலாளர்களுக்கு மாநில அரசு …

கல்லூரி, பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடக்கும்? – 13-ந் தேதிக்கு பிறகு முடிவு தெரியும்

கல்லூரி, பல்கலைக்கழகங்களின் செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடக்கும்? என்பது குறித்து 13-ந் தேதிக்கு பிறகு தெரியவரும் என்று பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்து இருக்கிறது. சென்னை, நாடு முழுவதும் கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் கல்லூரிகள் அனைத்தும் வருகிற 14-ந்தேதி வரை மூடப்பட்டு இருக்கின்றன. இந்த காலகட்டங்களில் மாணவர்களின் கற்றல், கற்பித்தலில் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக பல்கலைக்கழக மானியக்குழு ஆன்-லைனில் பாடம் நடத்துவது குறித்த ஆலோசனையை வழங்கியது. அதன்படி, சென்னை பல்கலைக்கழகம் அதன் கீழ் …

போக்குவரத்து வசதி குறைந்ததால் மளிகை பொருட்களின் விலை 25 சதவீதம் வரை உயர்வு

போக்குவரத்து வசதி குறைந்ததால் மளிகை பொருட்களின் விலை 25 சதவீதம் வரை உயர்ந்து இருக்கிறது. அதிலும் அரிசி, சர்க்கரை, பூண்டு ஆகியவற்றின் விலை மட்டும் அதிகளவில் உயர்ந்துள்ளது. சென்னை, கொரோனா பரவலை தடுக்க, ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனாலும் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் எந்த பிரச்சினையும் இருக்காது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, அத்தியாவசிய பொருட்களை மக்கள் வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் அத்தியாவசிய பொருட்களில் வரும் மளிகை பொருட்களின் …

ஸ்பெயின் நாட்டில் கொரோனா தாக்குதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது- பிரதமர் பெட்ரோ

ஸ்பெயினில் கொரோனாவின் தாக்குதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளதாக பிரதமர் பெட்ரோ சான்செஸ் இன்று தெரிவித்துள்ளார். மாட்ரிட் கொரோனா பாதிப்பால் ஸ்பெயின் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு 15238 பேர் பலியாகி உள்ளனர்.கடந்த புதன் கிழமை அங்கு ஒரே நாளில் 757 பேர்பலியானார்கள். கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 683பேர் பலியாகி உள்ளனர். மொத்தம் 152446 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஸ்பெயினில் கொரோனாவின் தாக்குதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளதாக பிரதமர் பெட்ரோ சான்செஸ் இன்று தெரிவித்துள்ளார். கொரோனா …

அமெரிக்காவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதி “மோடி செய்த உதவியை மறக்க மாட்டோம்” – டிரம்ப் நெகிழ்ச்சி

அமெரிக்காவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதை அனுமதித்த பிரதமர் மோடியின் உதவியை மறக்க மாட்டோம் என்று டிரம்ப் நெகிழ்ச்சியுடன் கூறினார். வாஷிங்டன், இந்தியா, மலேரியா காய்ச்சல் சிகிச்சையில் பயன்படுத்தக்கூடிய மாத்திரைகள், ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் ஆகும். இந்த மாத்திரைகள், தற்போது உலகமெங்கும் ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிற கொரோனா வைரஸ் தொற்று நோய் சிகிச்சையிலும் நல்லதொரு நிவாரணத்தை தருவது சோதனைகளில் தெரிய வந்துள்ளது. இந்த மாத்திரைகளின் ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்து இருந்தது. ஆனால் டிரம்ப் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த …

மெக்சிகோவில் பயங்கரம்: ஊரடங்கு பிறப்பித்த மேயர் சுட்டுக்கொலை

மெக்சிகோவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பித்த மேயரை போதைப்பொருள் கும்பல் சுட்டுக் கொன்றது. மெக்சிகோ சிட்டி, கொரோனா என்ற உயிர்க்கொல்லி வைரசால் அதிகமாக பாதிக்கப்பட்ட முதல் நாடாக அமெரிக்க உள்ளது. அங்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை நோக்கி நெருங்கி வருகிறது. பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது. அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோவிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருகிறது. அந்த நாட்டில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் …

இங்கிலாந்தில் ‘கொரோனா’வுக்கு மேலும் ஒரு இந்திய டாக்டர் பலி; ஆபத்தான நிலையில் மேலும் 5 டாக்டர்களுக்கு சிகிச்சை

இங்கிலாந்தில் கொரோனாவுக்கு மேலும் ஒரு இந்திய டாக்டர் பலியானார். ஆபத்தான நிலையில் இருக்கும் மேலும் 5 டாக்டர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லண்டன், இங்கிலாந்து நாட்டில், தேசிய சுகாதார பணியில் சுமார் 65 ஆயிரம் இந்திய டாக்டர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். அவர்களில் 70 சதவீதம் பேர் இந்தியாவில் பயிற்சி பெற்றவர்கள். இங்கிலாந்தில் கொரோனா தாக்குதல் அதிகமாக இருக்கும் நிலையில், அங்கு இந்திய டாக்டர்கள் முன்னணியில் நின்று களப் பணியாற்றி வருகிறார்கள். இதற்கிடையே அங்கு 2 நாட்களுக்கு …

ஒரே நாளில் 32 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று; அமெரிக்காவை உலுக்கும் கொரோனா – 10 மருந்துகளை கண்டுபிடித்து சோதனை நடப்பதாக டிரம்ப் தகவல்

அமெரிக்காவை கொரோனா உலுக்கி எடுக்கிறது. அங்கு ஒரே நாளில் 32 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பரவியது. கொரோனா நோயாளிகளை குணப்படுத்த 10 மருந்துகள் கண்டுபிடித்து, பரிசோதனை நடைபெற்று வருவதாக டிரம்ப் கூறி உள்ளார். வாஷிங்டன், சீனாவில் தோன்றிய கொரோனா வைரசுக்கு, இப்போது அமெரிக்கா அதிக விலை கொடுத்துக்கொண்டு இருக்கிறது. உலகில் சர்வ வல்லமை பெற்று விளங்கும் அமெரிக்காவை, கடந்த சில நாட்களாக கொரோனா உலுக்கி எடுக்கிறது. விஞ்ஞானம், மருத்துவம், தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் அந்த நாடு, …

இந்தியாவில் ஒரே நாளில் 591 பேருக்கு பரவியது; கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்தை எட்டுகிறது

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை எட்டிவருகிறது. ஒரே நாளில் 591 பேருக்கு பரவியது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருவது இன்னும் இரண்டாவது கட்டத்தில்தான் இருக்கிறது என்று சொல்லப்பட்டு வருகிறது. ஆனாலும் கொரோனா வைரஸ் வேகமாகவே பரவுகிறது. மூன்றாவது கட்டமான சமூக பரவலுக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிற நிலையிலும், நேற்றுடன் முடிந்த 24 மணி நேரத்தில், 591 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக தகவல்கள் சொல்கின்றன. நேற்றைய நிலவரப்படி, மாநில …