தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார் போரிஸ் ஜான்சன்

கொரோனா வைரஸ் பாதிப்பால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரிட்டன் பிரதமர் ஜான்சன் தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். லண்டன்: உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இங்கிலாந்து நாட்டிலும் வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் 65 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 ஆயிரத்து 500-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் (55) கொரோனா வைரஸ் பரவியது கடந்த மாதம் …

உலகின் பல்வேறு பகுதிகளில் தோன்றிய ‘பிங்க் சூப்பர் மூன்’ – நிலவின் அறிய புகைப்படங்களின் தொகுப்பு

உலகின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தோன்றிய ‘பிங்க் சூப்பர் மூன்’ நிலவின் அறிய புகைப்படங்களில் சிலவற்றை காணலாம். மாஸ்கோ: பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள தொலைவு வழக்கமான தூரம் 3 லட்சத்து 84 ஆயிரத்து 400 கிலோமீட்டர்கள் ஆகும். ஆனால், சில வானியல் நிகழ்வுகளின் போது நிலவு பூமிக்கு மிகவும் அருகில் வரும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வுகளின் போது பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான தூரம் பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் குறைந்து …

‘நன்றி நண்பரே’ நரேந்திர மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் டுவிட்

ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மருந்துகளை இஸ்ரேலுக்கு அனுப்பியதற்கு நன்றி நண்பரே என அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். ஜெருசலேம்: உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இஸ்ரேலிலும் பரவி வருகிறது. அந்நாட்டில் 9 ஆயிரத்து 968 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 86 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே, இந்தியாவில் மலேரியா நோய்க்கு தடுப்பு மருந்தாக பயன்படுத்தப்பட்டுவரும் ஹைட்ரோக்சிகுளோரோகுயின் எனப்படும் மருந்து கொரோனா வைரசை ஆரம்ப நிலையில் கட்டுப்படுத்துவதில் முக்கிய …

இங்கிலாந்தில் ‘கொரோனா’வுக்கு மேலும் ஒரு இந்திய டாக்டர் பலி

இங்கிலாந்தில் கொரோனாவுக்கு மேலும் ஒரு இந்திய டாக்டர் பலியானார். ஆபத்தான நிலையில் இருக்கும் மேலும் 5 டாக்டர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லண்டன்: இங்கிலாந்து நாட்டில், தேசிய சுகாதார பணியில் சுமார் 65 ஆயிரம் இந்திய டாக்டர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். அவர்களில் 70 சதவீதம் பேர் இந்தியாவில் பயிற்சி பெற்றவர்கள். இங்கிலாந்தில் கொரோனா தாக்குதல் அதிகமாக இருக்கும் நிலையில், அங்கு இந்திய டாக்டர்கள் முன்னணியில் நின்று களப் பணியாற்றி வருகிறார்கள். இதற்கிடையே அங்கு 2 நாட்களுக்கு …

சீனாவில் புதிதாக 63 பேருக்கு கொரோனா பாதிப்பு

வெளிநாடுகளில் இருந்து திரும்பிய சீனர்களால் இரண்டாம் கட்டமாக நோய் பரவல் உருவாகி இருப்பதாக சீனாவில் கவலை எழுந்துள்ளது பீஜிங்: சீனாவில் புதிதாக 63 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 61 பேர் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள். இதையடுத்து, வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 82 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. மேலும் 2 பேர் பலியானதால், பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து 335 ஆக உயர்ந்தது. சீனாவில் இயல்புநிலை திரும்பி வருகிறது. கொரோனா தோன்றிய …

கொரோனா தடுப்பு நடவடிக்கை; மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை எட்டியுள்ளநிலையில், பலி எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து கடந்த மாதம் 24-ந்தேதி நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திரமோடி கொரோனா …

கொரோனாவின் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கை நீட்டிப்பது பற்றி முடிவு – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா நோய் சமூகப் பரவலான 3-வது நிலைக்கு போக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நோயின் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கை நீட்டிப்பது பற்றி முடிவு செய்யப்படும் என்றார். சென்னை, தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க ஏற்படுத்தப்பட்டு உள்ள மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான 12 குழுக்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை …

கொரோனா பற்றிய சந்தேகங்களை தீர்க்க குரல் வழிச்சேவை – எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

கொரோனா பற்றிய சந்தேகங்களை தீர்க்க குரல் வழிச்சேவையை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்திலும், மத்திய சட்டம் மற்றும் நீதி, தொலைத் தொடர்பு துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் டெல்லியிலும் நேற்று, கொரோனா குறித்த சுய தகவல் பதிவு மற்றும் விரைவு நடவடிக்கை அமைப்பின் 94999 12345 என்ற குரல்வழிச் சேவையை காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி …

பிரதமர் கூறும் ஆலோசனை படி கர்நாடகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு – முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு

பிரதமர் கூறும் ஆலோசனை படிகர்நாடகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்துமுடிவு எடுக்கப்படும் என்று முதல்- மந்திரி எடியூரப்பா தெரிவித்து உள்ளார். பெங்களூரு, கர்நாடகத்தில் கொரோனாவை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது வருகிற 14-ந் தேதி நிறைவடைகிறது. இந்த ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுமா? அல்லது மேலும் நீட்டிக்கப்படுமா? என்பதை தெரிந்துகொள்ள மாநில மக்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். இந்த பரபரப்பான சூழ்நிலையில் கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் …

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ரத்து செய்யப்படுமா? ‘ அமைச்சர் செங்கோட்டையன் பதில்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா? என்ற கேள்விக்கே இடமில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சென்னை, கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தள்ளிவைப்பதாக அறிவித்தார். அதன்படி, வருகிற 15-ந்தேதி முதல் அந்த தேர்வு நடைபெறும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருவதோடு, இதன் காரணமாக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு குறித்த பல்வேறு செய்திகளும் உலா வருகின்றன. …