இத்தாலியில் படிப்படியாக குறைந்துவரும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை

கொரோனா தாக்குதலுக்கு இத்தாலியில் உயிரிழப்போரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. ரோம்: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் 16 லட்சத்து 85 ஆயிரத்து 610 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 12 லட்சத்து 8 ஆயிரத்து 290 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 3 லட்சத்து 75 ஆயிரத்து 221 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து …

ஒரே நாளில் தலா ஆயிரம் பேர் பலி – இங்கிலாந்து, பிரான்சை புரட்டி எடுக்கும் கோரோனா

இங்கிலாந்து மற்றும் பிரான்சில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் தலா ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். லண்டன்: உலகையே உலுக்கு வரும் கொரோனா வைரஸ் 16 லட்சத்து 96 ஆயிரத்து 286 பேருக்கு பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 12 லட்சத்து 17 ஆயிரத்து 730 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 49 ஆயிரத்து 833 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 லட்சத்து 75 ஆயிரத்து 960 பேர் …

5 லட்சம் பேருக்கு கொரோனா…ஒரே நாளில் 2 ஆயிரம் பேர் பலி… அதிரும் அமெரிக்கா

அமெரிக்காவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது. மேலும் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 37 பேர் உயிரிழந்துள்ளனர். நியூயார்க்: உலகையே உலுக்கு வரும் கொரோனா வைரஸ் 16 லட்சத்து 97 ஆயிரத்து 533 பேருக்கு பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 12 லட்சத்து 18 ஆயிரத்து 737 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 49 ஆயிரத்து 830 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 …

உலகையே கதிகலங்க வைக்கும் கொரோனா கொடூரத்தில் இருந்து தப்பிய 16 நாடுகள்..!

உலகையே கதிகலங்க வைக்கும் கொரோனா கொடூரத்தில் இருந்து 16 நாடுகள் மட்டும் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாஷிங்டன் உலகம் முழுவதும் இதுவரை 13 கோடி மக்கள் கொரோனா நோய்க்கு இலக்காகியுள்ளனர். அதுமட்டுமின்றி உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் கொரோனா பரவியுள்ளது.ஆனால் 16 நாடுகள் மட்டும் கொரோனா கொடூரத்திலிருந்து ஆச்சரியமாகத் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், ஏமன், கிரிபட்டி, கொமொரோஸ், லெசோதோ, மார்ஷல் தீவுகள், மைக்ரோனேஷியா, வட கொரியா, பலாவ், சாலமன் தீவுகள், சமோவா, தஜிகிஸ்தான், …

மக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்; சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை

புதுடில்லி: நாடு முழுதும் ‘கொரோனா’ வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், மக்கள் பின்பற்ற வேண்டியவை குறித்தும், செய்யக்கூடாத விஷயங்கள் குறித்தும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சில வழிமுறைகளை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இந்தியாவில், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால், இங்கு, 5,700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை, 160ஐ தாண்டி சென்றுகொண்டிருப்பதால், மக்கள் பீதியடைந்துள்ளனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள், பல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், …

நியூயார்க்கில் குறைகிறது கொரோனா பாதிப்பு

நியூயார்க்: ஊரடங்கு பலன் அளிக்க தொடங்கியதன் காரணமாக, நியூயார்க் மாகாணத்தில் கடந்த புதன் முதல் நேற்று வரையிலான 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும், புதிய ஐ.சி.யூ சேர்க்கைகளும் குறைய ஆரம்பித்துள்ளது. தொற்றுநோய்க்கு எதிரான நியூயார்க் மாகாண போரில், வெற்றிக்கான அறிகுறியாக இது பார்க்கப்படுகிறது. புதிதாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெறும் 200 ஆக குறைந்தது. இது கொரோனா தாக்கம் தொடங்கியதிலிருந்து மிகக் குறைவான எண்ணிக்கை என கவர்னர் கியூமோ கூறினார். …

புனித வெள்ளி: பிரதமர் மோடி வாழ்த்து!

புதுடில்லி: உலகம் முழுவதும் கிறிஸ்துவர்கள் இன்று புனித வெள்ளி தினத்தை கொண்டாடுகின்றனர். இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. பிரதமர் மோடி கிறிஸ்தவ மக்களுக்கு தனது வாழ்த்துக்களை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில், ‘இயேசு மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவரது தைரியமும் நேர்மையும் தனித்து நிற்கின்றன. அவரது நீதி உணர்வும் அவ்வாறே இருக்கிறது. இந்த புனித வெள்ளியன்று, இயேசு கிறிஸ்துவையும், உண்மை, சேவை, நீதிக்கான அவரது அர்ப்பணிப்பையும் நினைவு கொள்வோம்.’ …

ஊரடங்கை மீறிய 1.35 லட்சம் பேர் கைது

சென்னை: தமிழகத்தில், ஊரடங்கை மீறி வெளியில் சுற்றிய 1,35,734 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலத்தில் தடையை மீறி வெளியில் சுற்றிய 1,35,734 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் மீது, 1,25,708 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில், 1,06,539 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.45,13,544 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு போலீசார் …

ஒரே நாளில் 2.19 கோடி மின்னணு பரிவர்த்தனைகள்

துடில்லி: இந்தியாவில் கடந்த மார்ச் 30ம் தேதி, சுமார் 2 கோடியே 19 லட்சம் மின்னணு பரிவர்த்தனைகளை மத்திய அரசு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில், மார்ச் 24 முதல் ஏப்.,14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மார்ச் மாதத்துடன் நிதியாண்டு நிறைவடைவதால், அம்மாதத்தின் கடைசி வாரத்திலும், ஏப்ரலில் முதலிரண்டு வாரங்களிலும் மத்திய அரசு அதிகாரிகளால் பல்வேறு நலத்திட்டங்களுக்கும், பயனாளிகளுக்கும் மின்னணு பரிவர்த்தனை மூலம் நிதி அனுப்பப்படும். அந்த வகையில் மார்ச் …

கொரோனா: கடலின் ஒரு துளியை தான் கண்டறிந்துள்ளோம்!

பெர்லின்: உலக நாடுகள் கண்டறிந்துள்ள கொரோனா வைரஸ் தொற்றுகள் எண்ணிக்கை வெறும் 6% தான் என்றும், உலகளவில் தொற்று ஏற்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை கோடிகளை தாண்டும் என ஜெர்மன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அதிர்ச்சி ஊட்டுகின்றனர். இன்றைய (ஏப்.,10) நிலவரப்படி உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 லட்சத்தை கடந்துள்ளது. 3.5 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது. இந்த நிலையில், ‘லான்செட் தொற்றுநோய்கள்’ என்ற மருத்துவ சஞ்சிகையில் வந்த தகவல்களை …