உலகம் முழுவதும் மருத்துவ ஊழியர்கள் 22 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஜெனிவா: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் 17 லட்சத்து 76 ஆயிரத்து 936 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 12 லட்சத்து 66 ஆயிரத்து 189 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தாக்குதலுக்கு உள்ளானவர்களில் …
கொரோனாவில் இருந்து மீண்ட 4 லட்சம் பேர்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 4 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். ஜெனிவா: சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாவிட்டாலும் …
10 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை – அதிர்ச்சியில் உறைந்த இங்கிலாந்து
இங்கிலாந்து நாட்டில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 917 பேர் உயிரிழந்தனர். இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. லண்டன்: சீனாவில் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் 17 லட்சத்து 75 ஆயிரத்து 586 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 558 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையில், சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா …
ஒரே நாளில் சுமார் 2 ஆயிரம் பேர் பலி… புதிதாக 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று – அலறும் அமெரிக்கா
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் வைரஸ் தாக்குதலுக்கு சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், புதிதாக 30 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நியூயார்க்: உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் 17 லட்சத்து 79 ஆயிரத்து 99 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 12 லட்சத்து 67 ஆயிரத்து 620 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் …
மேற்கு வங்கத்தில் கரோனா அபாயம் இருக்கும் 10 இடங்களுக்கு சீல்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் கரோனா பாதித்த நோயாளிகள் அதிகம் கண்டறியப்பட்ட 10 இடங்களுக்கு சீல் வைத்திருக்கும் மாநில நிர்வாகம், இங்கு அடுத்த 14 நாட்களுக்கு இந்த உத்தரவு நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து மேற்கு வங்க மாநில முதன்மைச் செயலாளர் ராஜீவா சின்ஹா கூறுகையில், கரோனா பாதித்த நோயாளிகள் அதிகம் கண்டறியப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகள் மற்றும் சந்தைகளும் மூடப்பட்டுவிட்டன. இந்த பகுதிக்குள் யாரும் நுழையவும் முடியாது, இந்த பகுதியில் இருந்து யாரும் …
கர்நாடகத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா: பாதிப்பு 214 ஆக உயர்வு
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கரோனா பரவியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதனால், மக்கள் பேரச்சத்தில் உறைந்துள்ளனர். இந்நிலையில், கர்நாடகத்தில் நேற்று மாலை முதல் இன்று நண்பகல் வரை புதிதாக 7 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர். 37 பேர் வரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில், ஐந்து பேர் மைசூருவைச் …
ஊரடங்கை நீட்டிப்பதாக பிரதமர் நல்ல முடிவை எடுத்திருக்கிறார்: கேஜரிவால்
ஊரடங்கை நீட்டிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி நல்ல முடிவை எடுத்திருக்கிறார் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் இந்தியாவில் ஏப்ரல் 14 வரை நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது முடிவடைய இன்னும் மூன்று நாள்களே உள்ள நிலையில், ஊரடங்கை மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்க வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் …
உடனடியாக ரூ. 1000 கோடி ஒதுக்க வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் வேண்டுகோள்
மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்களுக்காக உடனடியாக ரூ. 1000 கோடியை ஒதுக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். கரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் இன்று (சனிக்கிழமை) ஆலோசனை நடத்தினார். அப்போது தேசிய பேரிடர் நிதியில் இருந்து உடனடியாக ரூ. 1000 கோடி ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி முன்வைத்தார். பிரதமர் நரேந்திர மோடியிடம் …
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1666 ஆக உயர்வு
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 1666 ஆக அதிகரித்துள்ளது. மும்பை: கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது. மகாராஷ்டிரா தலைநகரான மும்பையிலும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நேற்று ஆயிரத்து ஐநூறை தாண்டியது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 92 பேருக்கு கொரோனா …
கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல்
கொரோனா நோயாளிக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) ஒப்புதல் அளித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கும் முறை தொடர்பான நடைமுறைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்த நோயாளியின் ரத்தத்தில், அவருக்கு கொடுக்கப்பட்ட மருந்தின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். எனவே அவரது ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை தனியாக பிரித்து எடுத்து, அதை மிகவும் ஆபத்தான …