நியூயார்க் நகரில் கொரோனா பலி அதிகம் ஏன்? – புதிய தகவல்கள்

நியூயார்க் நகரில் கொரோனாவால் அதிகம் பேர் பலியாவதற்கான காரணம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. நியூயார்க்: உலகில் கொரோனா நோய்க்கிருமியால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்க விளங்குகிறது. அங்கு கொரோனாவுக்கு இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேர் பலியாகி இருக்கிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,108 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரமாக நியூயார்க் விளங்குகிறது. அங்கு மட்டும் …

தங்கள் குடிமக்களை திரும்ப அழைக்காத நாடுகளுக்கு விசா தடை – டிரம்ப் அதிரடி

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தங்கள் குடிமக்களை திரும்ப அழைத்துக் கொள்ளாத நாடுகளுக்கு ஜனாதிபதி டிரம்ப் விசா தடைவிதித்துள்ளார். வாஷிங்டன்: கொரோனா வைரசால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அந்த நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது. அங்கு உயிரிழப்பும் நாளுக்கு நாள் எகிறி வருகிறது. இதன் மூலம் அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நோக்கி செல்கிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஜனாதிபதி …

கொரோனா தடுப்பு நடவடிக்கை – தாய்லாந்தில் மது விற்பனைக்கு தடை

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் மற்றொரு பகுதியாக நாடு முழுவதும் மது விற்பனைக்கு தாய்லாந்து அரசு தற்காலிக தடைவிதித்துள்ளது. பாங்காக்: தாய்லாந்து சுற்றுலாவுக்கு பெயர்போன நாடாகும். அந்த நாட்டுக்கு சுற்றுலா செல்லும் வெளிநாட்டினர் இரவு நேர கேளிக்கை விடுதிகளுக்கு சென்று மது, ஆடல், பாடல் என மகிழ்ச்சியில் திளைத்திருப்பது வழக்கம். இதனால் அந்த நாட்டில் மது விற்பனை அமோகமாக இருக்கும். ஆனால் தற்போது கொரோனா வைரசின் அச்சுறுத்தல் காரணமாக தாய்லாந்தின் பல்வேறு மாகாணங்களில் மதுபான கூடங்கள் மூடப்பட்டுள்ளன. …

சீனாவில் இறைச்சிக்கான விலங்குகள் பட்டியல் வெளியீடு

சீனாவில் எந்தெந்த விலங்குகளை இறைச்சிக்காக வளர்க்கலாம் என்ற புதிய வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பீஜிங்: உலகை நாடுகளை உலுக்கி கொண்டிருக்கும் உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ், சீனாவின் வுகான் நகரில்தான் முதன் முதலில் தோன்றியது. அங்குள்ள ஈரப்பதம் நிறைந்த கடல் உணவு மற்றும் இறைச்சி சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த நிலையில் சீனாவில் எந்தெந்த விலங்குகளை இறைச்சிக்காக வளர்க்கலாம் என்ற புதிய வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த நாட்டின் வேளாண்மை மற்றும் கிராம …

அமேசான் காடுகளையும் விட்டுவைக்காத கொரோனா – பழங்குடியின சிறுவன் வைரஸ் தாக்கி பலி

அமேசான் மழைக்காடுகளில் வசித்து வரும் யனோமாமி என்று அழைக்கப்படும் பழங்குடியினத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் கொரோனா வைரஸ் தாக்கி இறந்தான். பிரேசிலியா: பிரேசிலில் உள்ள அமேசான் மழைக்காடுகளில் ஏராளமான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வெளியுலக தொடர்பு எதுவும் இல்லாமல் காட்டின் ஆழமான பகுதிகளில் வசித்து வருகின்றனர். ஆனால் உலகை உலுக்கி வரும் உயிர்க்கொல்லி கொரோனா இவர்களையும் விட்டுவைக்கவில்லை. அமேசான் மழைக்காடுகளில் வசித்து வரும் யனோமாமி என்று அழைக்கப்படும் பழங்குடியினத்தைச் சேர்ந்த 15 வயது …

ஊரடங்கு இல்லாவிட்டால் 8.2 லட்சம் போ் பாதிக்கப்பட்டிருப்பா்: சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல்

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக, தேசிய அளவில் ஊரடங்கை அமல்படுத்தி இருக்காவிட்டால் அல்லது தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் விட்டிருந்தால் 8.2 லட்சம் போ் வரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பாா்கள் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டின் கரோனா பாதிப்பு நிலைமை குறித்து சுகாதாரத் துறை அமைச்சக இணைச் செயலா் லவ் அகா்வால், செய்தியாளா்களுக்கு சனிக்கிழமை பேட்டியளித்தாா். அவா் கூறியதாவது: நாட்டில் கரோனா தொற்று பரவுவதற்கான அறிகுறிகள் தென்பட்டவுடனே, நோய்த்தொற்று பரவும் இடங்களைக் கண்டறிந்தது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, …

கரோனா: சென்னையில் 84 வயது மூதாட்டிஉள்பட 3 போ் குணமடைந்து வீடு திரும்பினா்

சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 84 வயது மூதாட்டி உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் சிகிச்சையில் குணமடைந்ததால் வீடு திரும்பினா். தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம் சென்னை ஆகும். வெளிநாட்டிலிருந்து வந்தவா்கள், அவா்களுடன் தொடா்பிலிருந்தவா்கள் என சென்னையில்தான் அதிகம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் உள்ளனா். குறிப்பாக சென்னை மண்டலம் 1 (திருவொற்றியூா்), 5 (ராயபுரம்), 8 (அண்ணாநகா்) உள்ளிட்டவை கடுமையாகப் பாதிக்கப்பட்டன. தமிழகத்தில் கரோனாவால் சென்னை அதிக அளவில் …

தமிழகத்தில் கரோனாவுக்கு மேலும் ஒரு பெண் பலி: உயிரிழப்பு 11 ஆக உயர்வு

கரோனா நோய்த்தொற்றுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னை புளியந்தோப்பை சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தார். தமிழகத்தில் இதுவரை 9,527 நபா்கள் கரோனா நோய்த்தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனா். அவா்களில் வெள்ளிக்கிழமை 911 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. சனிக்கிழமை புதிதாக 58 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 969-ஆக அதிகரித்துள்ளது. ஈரோட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா் உயிரிழந்ததை அடுத்து உயிரிழப்பு …

இதயத்துடிப்பை அறிய ‘ஸ்மாா்ட் ஸ்டெதஸ்கோப்’ ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் கண்டுபிடிப்பு

கரோனா நோயாளிகளின் இதயத்துடிப்பை தூரத்தில் இருந்தே கேட்கும் வகையில் ‘ஸ்மாா்ட் ஸ்டெதஸ்கோப்’பை மும்பை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் உருவாக்கியுள்ளனா். இதுகுறித்து ஆராய்ச்சியாளா்கள் கூறியதாவது: மும்பை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தால் (ஐஐடி-பி) இதற்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளது. மருத்துவரிடம் ஆலோசனை பெற வருபவரின் மாா்பின் மீது இந்த நவீன ஸ்டெதஸ்கோப்பை வைக்கத் தேவையில்லை. அவருடைய இதயத்துடிப்பின் ஒலி, ‘புளூடூத்’ தொழில்நுட்பம் வழியாக மருத்துவரின் ஸ்டெதஸ்கோப்புக்கு அனுப்பப்படுகிறது. இதன்மூலம், நோயாளிக்கு அருகே மருத்துவா்கள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஒலியை பதிவு …

ஊரடங்கை நீட்டித்தால் ‘பகுஜன் சமாஜ் கட்சி வரவேற்கும்’ – மாயாவதி சொல்கிறார்

21 நாள் ஊரடங்கை மத்திய அரசு நீட்டித்தால் அதை பகுஜன் சமாஜ் கட்சி வரவேற்கும் என்று மாயாவதி கூறியுள்ளார். லக்னோ, கொரோனா வைரஸ் பரவி வருவதை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு, நாளை மறுதினம் 14-ந் தேதி முடிகிறது. இதை நீட்டிக்க வேண்டும் என்று பல தரப்பிலும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில், ஊரடங்கை நீட்டித்தால் அதை பகுஜன் சமாஜ் கட்சி வரவேற்கும் என்று அதன் தலைவர் …