இனிய தமிழ்  புத்தாண்டு நல்வாழ்த்துகள்! S .A .சுபாஷ் பண்ணையார் 

இளமை பொங்கி இனிமை ஓங்கிட வளர்பிறை போல அறிவும் வளர்ந்திட தெளிவான அறிவுடன் திறமை மிகுந்திட வளமும் பெருகிட வருவாய் தமிழ் புத்தாண்டே! மதமும் இனமும் மனதினே ஆளாமல் மனிதமும் புனிதமும் மலையாய் உயரட்டும்..! இடரும் இன்னலும் இனிமேலும் துளிராமல் வளரும் வெண்ணிலவாய் வருங்காலம் பிறக்கட்டும்..! செல்வம் பெருகி வறுமை தீர இல்லாமை என்ற நிலைமை  மறைய நல்வினை புரிந்து நன்மை பெற்றிட வல்லமை தந்திட வருவாய் தமிழ்  புத்தாண்டே! வருகின்ற புத்தாண்டு வளம் சேர்க்கட்டும்! வயலெல்லாம் விளைந்திருக்க …

சீனாவில் கொரோனாவின் 2-வது அலை: 6 வாரங்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

சீனாவில் கொரோனாவின் 2-வது அலை: 6 வாரங்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது பெய்ஜிங் சீனாவின் ஊஹானில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது 180 நாடுகளுக்கு மேல் தடம்படித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் இதுவரை 18 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் ஆரம்பத்தில் வேகமாக பரவிய கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. உகான் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன் ஊரடங்கு உத்தரவு முழுமையாக விலக்கப்பட்டது. தற்போது வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் கொரோனா …

கொரோனா வைரஸ் தடுப்பூசி செப்டம்பருக்குள் தயாராகி விடும்- ஆக்ஸ்போர்டு விஞ்ஞானி தகவல்

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், இதற்கான தடுப்பூசி செப்டம்பர் மாதத்திற்குள் தயாராகிவிடும் என்று ஆக்ஸ்போர்டு விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார். லண்டன் உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய நோயான கொரோனா வைரஸிற்கு இதுவரை 108,330 பேர் உயிரிழந்துள்ளனர். 1,771,459 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் கொரோனா வைரஸின் தீவிரம் இன்று வரை குறைந்த பாடில்லை. இதன் காரணமாக நாட்டில் அடுத்த மூன்று முதல் ஆறு வாரங்கள் வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இங்கிலாந்தில் கொரோனா …

கொரோனா பாதிப்பு: மீண்டு வரும் இத்தாலி மே 3 ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

புதிய கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்க மே 3 வரை இத்தாலி முழு ஊரடங்கு என்று பிரதமர் கியூசெப் கோன்டே வெள்ளிக்கிழமை அறிவித்து உள்ளார். ரோம் இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 431 பேர் உயிரிழந்துள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளதால், இது கடந்த 24 நாட்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையாக பதிவாகியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஐரோப்பாவின் பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் கொரோனாவால் உயிரிழப்பு பெருமளவு ஏற்பட்டுள்ளது.கொரோனாவுக்கு …

இந்தியா அனுப்பிய மருந்துகள் அமெரிக்காவை அடைந்தன

இந்தியா அனுப்பிய மருந்துகள் அமெரிக்காவை சென்று அடைந்தன. வாஷிங்டன், கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு அளிப்பதற்காக ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மருந்துகளை அளிக்குமாறு இந்தியாவிடம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கேட்டுக்கொண்டார். அதை ஏற்று, இந்த மருந்து ஏற்றுமதிக்கான தடையை இந்தியா நீக்கியது. அதன்படி, 35 லட்சத்து 82 ஆயிரம் ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மாத்திரைகள், அவற்றை தயாரிப்பதற்கான 9 டன் மூலப்பொருட்கள் ஆகியவற்றை விமானம் மூலம் இந்தியா அனுப்பி வைத்தது. அந்த விமானம், நேற்று முன்தினம் அமெரிக்காவின் நெவார்க் விமான நிலையத்தை அடைந்தது. …

நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

நாடு தழுவிய ஊரடங்கு நாளையுடன் நிறைவடய உள்ள நிலையில், நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் கொரோனா வைரசின் தாக்கம் குறையவில்லை. நாளையுடன் (14 ஆம் தேதி) நிறைவடைய உள்ள 21 நாட்கள் ஊரடங்கை மத்திய அரசு, மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கலாம் என்று …

கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறைந்து உள்ளன -அமைச்சர் தாமஸ் ஐசக்

கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறைந்து உள்ளன என அமைச்சர் தாமஸ் ஐசக் கூறி உள்ளார். திருவனந்தபுரம் கேரளாவில் 376 கொரோனா வைரஸ் பாதிப்புகள் உள்ளன. கொரோனா பாதிப்பால் 3 பேர் உயிர் இழந்து உள்ளனர். 36 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். ஒரு வாரத்திற்கும் மேலாக இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. ஒரு வாரத்திற்கு முன்பு, கேரளாவில் 357 பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இறந்தவர்களின் எண்ணிக்கை அப்படியே உள்ளது. கடந்த மாதம், மாநிலங்களின் பட்டியலில் கேரளா முதலிடத்தில் …

தரமற்ற பொருட்கள் ஏற்றுமதி விமர்சனம் : சீனா கடுமையான தரக்கட்டுப்பாடு சோதனை நடவடிக்கைகள்

தரமற்ற பொருட்கள் ஏற்றுமதி விமர்சனம் : சீனா கடுமையான தரக்கட்டுப்பாடு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புதுடெல்லி: சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில், வெளிநாடுகளின் தேவைக்காக மருத்துவ உபகரணங்கள் உற்பத்தியை சீனா அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் 1-ந் தேதியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 386 கோடி முக கவசங்கள், 3 கோடியே 75 லட்சம் கவச உடைகள், 16 ஆயிரம் செயற்கை சுவாச கருவிகள், 21 லட்சம் சோதனை கருவிகள் ஆகியவற்றை …

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 308 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 308 ஆக உயர்ந்து உள்ளது. புதுடெல்லி, நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை நேற்று வரை 273 ஆக உயர்ந்து இருந்தது. கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தொடர்ந்து மராட்டிய மாநிலமே முதல் இடம் வகிக்கிறது. அங்கு 2,000க்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கையும் அம்மாநிலத்திலேயே அதிகமாக உள்ளது. …

கொரோனா பாதிப்பு: இந்தியாவில் இருந்து சொந்தநாட்டிற்கு திரும்ப விரும்பாத அமெரிக்கர்கள்

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் இந்தியாவில் இருந்து சொந்தநாட்டிற்கு திரும்ப அமெரிக்கர்கள் விரும்பவில்லை. புதுடெல்லி: ஆஸ்திரேலியாவை சேர்ந்த 444 பேர் வார இறுதியில் புதுடெல்லியில் இருந்து மெல்போர்னுக்கு சிறப்பு விமானத்தில் சென்று உள்ளனர். ஆனால் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள அமெரிக்காவிற்கு செல்ல இங்குள்ள அமெரிக்கர்கள் விரும்பவில்லை. இந்த வார தொடக்கத்தில், இங்குள்ள அமெரிக்கர்களை சொந்த நாட்டிற்கு அழைத்துச் செல்ல அமெரிக்க வெளியுறவுத்துறை சிறப்பு விமானங்களை இயக்கி வந்தாலும், பல அமெரிக்க பிரஜைகள் இந்தியாவில் தங்க …