டி.என்.பி.எஸ்.சி. புதிய தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக பதவி ஏற்ற அவர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரி அருள்மொழி இருந்து வந்தார். அவர் ஓய்வு பெற்றுள்ள நிலையில், புதிய தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரி கா.பாலச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. புதிய தலைவராக நியமிக்கப்பட்ட கா.பாலச்சந்திரன், உடனடியாக சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்திற்கு நேற்று சென்று பொறுப்பு …
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எப்போது? – கல்வித்துறை தகவல்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 27-ந்தேதி தொடங்க இருந்தது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 9½ லட்சம் மாணவர்கள் எழுத இருந்தனர். ஆனால் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அது தள்ளிவைக்கப்படுகிறது என்றும், ஏப்ரல் 15-ந்தேதி அன்று மீண்டும் தேர்வு தொடங்கும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்ட சபையில் அறிவித்தார். இதற்கிடையில் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் …
எதிர்க்கட்சிகள் உண்மைக்கு புறம்பாக பிரசாரம்: நிவாரண உதவிகளை பாதுகாப்பாக வழங்குவதே அரசின் நிலைப்பாடு – தடை குறித்து தமிழக அரசு விளக்கம்
கொரோனா நிவாரண உதவிகளை பாதுகாப்பாக வழங்க வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என்று தடை உத்தரவு குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- சுனாமி, பெரு வெள்ளம், ஒகி புயல், வர்தா புயல் போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்களின் வீடுகள், தினசரி உபயோகப் பொருட்கள், வாழ்வாதாரம் போன்றவை இழந்து நின்ற சோதனையான காலகட்டத்தில் தன்னார்வலர்கள் மற்றும் அமைப்புகள் செய்த பணிகள் மகத்தானது. அதை தமிழ்நாடு அரசு மனமுவந்து …
தடுப்பூசி தயாரிக்க உதவும் கொரோனா மரபணு வரிசையை கண்டறிந்த பெண் விஞ்ஞானியை மிரட்டிய சீனா
கொரோனா மரபணு வரிசையை கண்டறிந்த பெண் விஞ்ஞானியை மிரட்டிய சீனா இந்த மரபணு சோதனைகள் மற்றும் தடுப்பூசிகளுக்கு இன்றியமையாதது ஆகும். பெய்ஜிங் சீனாவின் உகான் நகரில் கடல் மாமிச உணவு விற்கும் சட்ட விரோத சந்தையிலிருந்துதான் கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என சீனாவின் நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்புப் பிரிவு இயக்குநர் காவோ ஃபூ தெரிவித்திருந்தார்.கரோனா வைரஸ் விலங்கிலிருந்துதான் மனிதருக்குப் பரவியிருக்கிறது என்று பரவலாக நம்பப்படுகிறது, ஆனால் சீனா அதிகாரப்பூர்வமாக இதனை அறிவிக்கவில்லை. சீன மக்களில் வாழ்க்கையில் விலங்குகள் …
கொரோனா வைரஸ் பிடியில் இருந்து சீன நகரம் உகான், மீண்டது எப்படி?
கொரோனா வைரஸ் பிடியில் இருந்து உகான் நகரம் மீண்டது எப்படி என்பது பற்றி அங்குள்ள பிரபல மருத்துவ நிபுணர் விளக்கி உள்ளார். உகான், சீனாவின் மத்திய நகரமான உகானைப்பற்றி இப்போது உலக மக்கள் அத்தனை பேருக்கும் தெரிந்திருக்கிறது. அந்த அளவுக்கு உகான் நகரம் மக்கள் மனங்களுக்கு நெருக்கமாகி விட்டது. அந்த நகரம் இப்போது கொரோனா வைரஸ் என்ற கொலைகார வைரஸ் பரவலில் இருந்து விடுதலை பெற்றிருக்கிறது. கொரோனா வைரசுக்கு எதிரான போரில், அந்த நகரத்தில் உள்ள லீ …
டெல்லியில் மத்திய மந்திரிகள் அலுவலகம் சென்று பணிகளை தொடங்கினர்
டெல்லியில் மத்திய மந்திரிகள் அலுவலகம் சென்று தங்கள் பணிகளை தொடங்கினர். புதுடெல்லி, கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் கடந்த மாதம் 25-ந் தேதி முதல் இன்று (செவ்வாய்க்கிழமை) வரை 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டதால், போக்குவரத்து நிறுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தனியார் அலுவலகங்கள் மூடப்பட்டன. அரசு அலுவலகங்களில் குறைந்த அளவிலான ஊழியர்களே பணிக்கு வருகிறார்கள். டெல்லியில் உள்ள மத்திய அமைச்சக அலுவலகங்களிலும் பணிகள் முடங்கின. ஊரடங்கின் காரணமாக வீடுகளில் இருந்தபடியே பணிகளை …
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியது
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியது. புதுடெல்லி, சீனாவில் உருவான கொடூர கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி 1 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் உயிரை காவு வாங்கி உள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் உள்ள நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனாலும் தொடர்ந்து தனது கோர முகத்தை காட்டி வரும் கொரோனா வைரஸ் தினந்தோறும் ஆயிரக்கணக் கானோருக்கு பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கி உள்ளது. …
தமிழ் புத்தாண்டு ஜனாதிபதி-துணை ஜனாதிபதி வாழ்த்து
தமிழ் புத்தாண்டையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளனர். புதுடெல்லி, தமிழ் புத்தாண்டையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து கூறியுள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில், தமிழ் புத்தாண்டு, விஷூ உள்ளிட்ட இந்த விழாக்கள் பல்வேறு கலாசாரங்கள், ஒற்றுமை ஆகியவற்றின் அடையாளமாக விளங்குவதாகவும், கொரோனாவின் பாதிப்பால் நாடு இதற்கு முன் எப்போதும் கண்டிராத பெரும் சவாலை சந்தித்து இருப்பதால், மக்கள் சமூக விலகலை பின்பற்றி எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் …
இலங்கையில் 80 இந்தியர்கள் சிக்கி தவிப்பு; பணம் குறைந்து வருவதால் உடனடியாக மீட்க கோரிக்கை
இலங்கையில் சிக்கி தவித்து வரும் 80 இந்தியர்கள் கையில் இருக்கும் பணம் குறைந்து வருவதால் உடனடியாக தங்களை மீட்க கோரிக்கை விடுத்துள்ளனர். புதுடெல்லி, சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் தனது கோரப்பிடியால் மிரட்டி வருகிறது. கொரோனா வைரசால் பல்வேறு நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவுக்கு முன் இந்தியாவில் இருந்து இலங்கை சென்ற 80 இந்தியர்கள் அங்கு சிக்கி …
மக்களின் தேவையை பூர்த்தி செய்ய நாடு முழுவதும் 20 லட்சம் சில்லரை விற்பனை கடைகள் -மத்திய அரசு ஏற்பாடு
மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், நாடு முழுவதும் 20 லட்சம் சில்லரை விற்பனை கடைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. கொரோனாவின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. கடைகளை திறக்கவும் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருக்கிறது. பொருட்களை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதிலும் சிரமம் உள்ளது. பல இடங்களில் மார்க் கெட்டுகளிலும், கடைகளிலும் சமூக விலகலை கடைபிடிக்காமல் மக்கள் நெருக்கமாக நிற்பதால் கொரோனா தொற்று எளிதில் …