அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து சுவாசக்கருவிகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் அடங்கிய 150 பார்சல்கள் சென்னைக்கு சரக்கு விமானங்கள் மூலம் கொண்டு வரப்பட்ட உள்ளன. சென்னை, கொரோனா வைரஸ் பரவுவது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போனாலும் நோய் பரவுதலை முற்றிலும் தடுக்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ கருவிகள் தேவைக்கு ஏற்ப போதுமான அளவு இல்லாமல் …
தி.மு.க. சார்பில் இன்று நடைபெற இருந்த அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அனுமதி இல்லை – போலீசார் அறிவிப்பு
தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருப்பதால், தி.மு.க. இன்று ஏற்பாடு செய்து இருந்த அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்து விட்டனர். சென்னை, தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி அரசு ஆலோசனை நடத்த வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால், கொரோனா மருத்துவம் சார்ந்த விஷயம் என்பதால் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அவசியம் இல்லை என்று …
ஒரே நாளில் 23 பேர் ‘டிஸ்சார்ஜ்’: தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா தொற்று சிகிச்சை முடிந்து நேற்று ஒரே நாளில் 23 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,204 ஆக உயர்ந்துள்ளது. சென்னை, நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் புதிதாக 31 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,204 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று ஒரே நாளில் 23 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். தமிழக சுகாதாரத்துறை செயலாளர் …
சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஓட்டியவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை – போலீஸ் கமிஷனர் பேட்டி
சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஓட்டியவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார். சென்னை, சென்னை மாநகர போக்குவரத்து போலீசாருக்கு நவீன முக கவசம் நேற்று வழங்கப்பட்டது. இந்த நவீன முக கவசம் முகத்தில் காது, கண் போன்றவற்றையும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி. பேராசிரியர் கள் வடிவமைத்துள்ள இந்த முக கவசம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் …
முதியோர் உதவித்தொகை வீடு தேடி வரும்; யாரும் வங்கிக்கு செல்ல வேண்டாம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவிப்பு
முதியோர் உதவித்தொகை வீடு தேடி வரும் எனவும், யாரும் வங்கிக்கு செல்ல வேண்டாம் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். சென்னை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று சென்னை எழிலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் முதியோர் உதவித்தொகை வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டியதால் முதியோர்கள் வங்கிக்கு வர வேண்டாம். வங்கி ஊழியர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று …
கொரோனா சமூக தொற்றுக்கான சங்கிலியை உடைத்து எறிந்து விட்டோம் – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
கொரோனா சமூக தொற்றாக பரவும் நிலைக்கான சங்கிலியை உடைத்து எறிந்துவிட்டோம் என்றும், ஊரடங்குக்கு மக்களின் ஒத்துழைப்பு 100 சதவீதம் கிடைக்கும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை, தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது குறித்து, அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- அமெரிக்கா, இத்தாலி போன்ற வளர்ந்த நாடுகள் உரிய நேரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்காததால் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், பிரதமர் நரேந்திரமோடியும் சரியான …
கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய ஆய்வு கட்டுரைகளுக்கு சீன அரசு கடிவாளம் – அறிவியல் உலகம் அதிர்ச்சி
கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு சீன அரசு கடிவாளம் போட்டிருக்கிறது. இது அறிவியல் உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பீஜிங், உலக நாடுகள் அனைத்தையும் விரல் நுனியில் வைத்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிற கொரோனா வைரசின் தோற்றம் பற்றிய கேள்விகள் பில்லியன் டாலர் கேள்விகளாக நிலைத்து நிற்கின்றன. சீனாவின் உகான் நகரில் உள்ள கடல்வாழ் உயிரினங்கள் விற்பனை சந்தையில்தான் இந்த வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி தோன்றியது என்பதுதான் இதுவரை சொல்லப்பட்டு வருகிற தகவலாக …
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம், பலி குறைகிறது: 1-ந் தேதி முதல் கட்டுப்பாடுகளை தளர்த்த டிரம்ப் நிர்வாகம் திட்டம்
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கமும், அதனால் ஏற்படுகிற உயிர்ப்பலிகளும் குறையத் தொடங்கி உள்ளது. 1-ந் தேதி முதல் கட்டுப்பாடுகளை தளர்த்த டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. வாஷிங்டன், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கி கடந்த சில நாட்களாக தினமும் 2 ஆயிரம் பேர் அளவுக்கு உயிரிழந்து வந்தனர். ஆனால், இப்போது தாக்கமும் சரி, உயிரிழப்பும் சரி குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1334 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் அந்த நாட்டில் கொரோனா …
10 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று; இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6 நாளில் இருமடங்கு அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 6 நாளில் இருமடங்கு ஆனது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துவிட்டது. புதுடெல்லி, சீனாவில் உருவான ஆட்கொல்லி வைரசான கொரோனா தனது கோரப்பார்வையை இந்தியா பக்கமும் திருப்பியது. இதனால் அந்த வைரசிடம் இருந்து மக்களை காக்க தனிமைப்படுத்துதலே அவசியம் என்பதால் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு நேற்றுடன் முடிவுக்கு வந்தநிலையில், தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி ஊரடங்கு அடுத்த …