ஊரடங்கு காலத்தில் வேளாண்மை தடைபடாமல் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன? – அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி விளக்கம்

ஊரடங்கு காலத்தில் வேளாண்மை தடைபடாமல் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி அந்தத் துறையின் முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி விளக்கம் அளித்துள்ளார். சென்னை, வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி, தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஊரடங்கு காலத்தில் சாகுபடிப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதற்கும், விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களை எவ்வித தடையுமின்றி விற்பனை செய்வதற்கும் வேளாண்மைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு …

பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிப்போக வாய்ப்பு

பள்ளி திறப்பு தேதி தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது. சென்னை, கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டு இருக்கின்றன. பிளஸ்-1 பொதுத்தேர்வின் இறுதி தேர்வும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வும் தள்ளிவைக்கப்பட்டது. அதேபோல், 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் ஆண்டின் இறுதி தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அரசால் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த பிளஸ்-2 பொதுத்தேர்வு மற்றும் நடத்தி முடிக்கப்பட்ட …

இந்தியாவுக்கு ரூ.1,178 கோடி ஏவுகணைகள் விற்பனை – அமெரிக்கா ஒப்புதல்

இந்தியாவுக்கு ரூ.1,178 கோடி மதிப்புள்ள ஏவுகணைகள் விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் தெரிவித்துள்ளது. வாஷிங்டன், இந்தியாவுக்கு ‘மாபெரும் பாதுகாப்பு கூட்டாளி’ என்ற அந்தஸ்தை கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்கா அளித்தது. இதன்மூலம், அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளிகளுக்கு சமமாக அதிநவீன ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை இந்தியா பெற முடியும். அந்தவகையில், விமானத்தில் இருந்து செலுத்தி, கப்பல்களை தகர்க்கவல்ல ஏவுகணைகளை தங்களுக்கு விற்பனை செய்யுமாறு அமெரிக்காவிடம் இந்தியா கேட்டுக்கொண்டது. இந்தியாவின் வேண்டுகோளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளது. விமானத்தில் இருந்து செலுத்தி கப்பல்களை …

கொரோனா மருந்து இல்லை என்றால்: அமெரிக்காவில் 2022 வரை சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்

விரைவில் கொரோனாவுக்கான மருந்து கண்டறியப்படவில்லை என்றால், அமெரிக்காவில் 2022வரை சமூக விலகலை கடைபிடிக்க வேண்டி இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வாஷிங்டன் உலகம் முழுவதும் 19 லட்சத்து 97 ஆயிரத்து 620 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, இதுவரையிலும் 4 லட்சத்துக்கு 78 ஆயிரத்து 425 பேர் குணமாகியுள்ளனர்.தற்போது அமெரிக்காவில் மட்டும் 6 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 407 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் வைரஸ் …

இந்தியாவில் 170 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் – மத்திய அரசு தகவல்

இந்தியாவில் கொரோனாவால் 170 மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து நேற்று அவர் டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- புதுடெல்லி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,076 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 439 ஆக அதிகரித்து இருக்கிறது. உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 377 ஆக …

மே 3-ந் தேதிவரை பயணிக்க எடுக்கப்பட்ட 39 லட்சம் ரெயில் டிக்கெட்டுகள் ரத்து

ரெயில் சேவை ரத்து காரணமாக, மே 3-ந் தேதி வரை பயணம் செய்ய முன்பதிவு செய்யப்பட்ட 39 லட்சம் ரெயில் டிக்கெட்டுகளை ரெயில்வே துறை ரத்து செய்தது. புதுடெல்லி, நாடு தழுவிய ஊரடங்கு, மே 3-ந் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால், ரெயில்கள் ரத்து, 3-ந் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 9 ஆயிரம் பயணிகள் ரெயில் கள், 3 ஆயிரம் மெயில், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் உள்பட 15 ஆயிரத்து 523 ரெயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. அதனால், நேற்று (புதன்கிழமை) …

ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு; குஜராத் முதல்-மந்திரி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்

குஜராத் முதல்-மந்திரி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் அந்த மாநில முதல்-மந்திரி விஜய் ரூபானி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். காந்திநகர், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் அடுத்த மாதம் 3-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தநிலையில் குஜராத்தில் கொரோனா தடுப்பு பற்றிய ஆலோசனை கூட்டம் மாநில முதல்-மந்திரியின் அலுவலக இல்லத்தில் …

தமிழகத்தில் 2 வகை வவ்வால்களில் கொரோனா வைரஸ்; இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவலால் பரபரப்பு

தமிழகத்தில் காணப்படும் 2 வகை வவ்வால்களில் கொரோனா வைரஸ் காணப்படுவது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுடெல்லி, கொலைகார கொரோனா வைரஸ் தொற்று நோய் உலக நாடுகளையெல்லாம் பெருத்த கலக்கத்தில் ஆழ்த்தி வருகிறது. உலகமெங்கும் மூன்றில் ஒரு பங்கு மக்கள் வீடுகளுக்குள் அடைப்பட்டு கிடக்கின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, இமாசல பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் காணப்படுகிற 2 வகை வவ்வால்களில் “வவ்வால் கொரோனா” …

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தது

காய்கறிகள் விளைச்சல் அதிகம் காரணமாக ஊரடங்கிலும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து தங்கு தடையின்றி வருகிறது. இதன் காரணமாக காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தது காய்கறிகள் போரூர்: கோயம்பேடு காய்கறி மார்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி 350-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் தினசரி விற்பனைக்கு வருகிறது. கொரோனா வைரஸ் நோய் பரவுவதை தடுத்திடும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு …

கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்கியது

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 933 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா வைரஸ் புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து …