அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி டிரம்பை எதிர்த்து போட்டியிடும் ஜோ பிடெனுக்கு, முன்னாள் ஜனாதிபதி ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார். வாஷிங்டன்: அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் 3-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்வு செய்வதற்கான மாகாணவாரி தேர்தல் நடந்து வருகிறது. இதில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடெனுக்கும், செனட் சபை உறுப்பினர் …
அமெரிக்க பொருளாதார மீட்பு குழுவில் 6 இந்திய வம்சாவளியினா்
அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்று அதிதீவிரமாகப் பரவி வரும் சூழலில், அந்நாட்டுப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான குழுக்களில் கூகுள் தலைமை நிா்வாக அதிகாரி சுந்தா் பிச்சை உள்பட 6 இந்திய வம்சாவளியினா் இடம்பெற்றுள்ளனா். கரோனா நோய்த்தொற்றால் அமெரிக்கா அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அதன் காரணமாக அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழல் காரணமாக, 1.6 கோடிக்கும் அதிகமானோா் வேலையிழந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இந்தச் சூழலில், அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக 200-க்கும் மேற்பட்ட …
ஊரடங்கு: சிறப்பு ரயில்கள் மூலம் 20,474 டன் சரக்கு போக்குவரத்து
கடந்த மாதம் 25-ஆம் தேதி தேசிய ஊரடங்கு தொடங்கியதிலிருந்து இதுவரை 20,474 டன் அளவிலான அத்தியாவசியப் பொருள்கள் சிறப்பு ரயில்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டதாக ரயில்வே தெரிவித்துள்ளது. இதன் மூலம் ரயில்வேக்கு ரூ.7.54 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதுதொடா்பாக ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் மத்திய அரசின் நடவடிக்கையில் ரயில்வேயும் பங்காற்றி வருகிறது. அதன்படி, அத்தியாவசியப் பொருள்களை எடுத்துச் செல்வதற்காக சிறப்பு பாா்சல் …
அனைத்து மளிகைக் கடைகளிலும் இன்று முதல் விலைப்பட்டியல்
ஊரடங்கைப் பயன்படுத்தி மளிகைக் கடைகளில் அதிக விலையில் பொருள்கள் விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், வியாழக்கிழமை முதல் அனைத்துக் கடைகளிலும் விலைப்பட்டியல்கள் வைக்கப்படவுள்ளன. கரோனா பரவுதலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், மளிகைப் பொருள்கள், பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்கும் வகையில் சரக்கு வாகனங்கள் போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. மேலும், உணவுப் பொருள்களை பதுக்கினாலோ, அதிக விலைக்கு விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட, மாநகராட்சி நிா்வாகங்கள் …
நேரு உள்விளையாட்டரங்கம் உள்பட 1,000 இடங்களில் கரோனா வாா்டுகள் அமைக்க நடவடிக்கை
சென்னை நேரு உள்விளையாட்டரங்கம், நந்தம்பாக்கம் வா்த்தக மையம் உள்பட தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது இடங்களில் கரோனா சிகிச்சைக்கான வாா்டுகள் அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரு உள்விளையாட்டரங்கில் ஆயிரம் படுக்கைகளும், நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் 600 படுக்கைகளும், அம்பத்தூா் தொழிற்பேட்டை உற்பத்தியாளா்கள் சங்க (அய்மா) வளாகத்தில் 300 படுக்கைகளும் கூடிய கரோனா வாா்டுகள் அமைக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை …
ஊரக தொழில் நிறுவனங்கள் ஏப். 20 முதல் இயங்கலாம்
நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் தளா்த்துவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டது. அதன்படி, ஊரகப் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் சமூக இடைவெளியை முறையாகக் கடைப்பிடித்து ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் மே மாதம் 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமா் நரேந்திர மோடி கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். இந்தச் சூழலில் …
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 33 ஆயிரத்தை கடந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 33 ஆயிரத்தை கடந்துள்ளது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் …
ஊரடங்கையொட்டி தமிழகத்தில் எடுக்க வேண்டிய தொடர் நடவடிக்கைகள் என்ன? – எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை
பிரதமர் அறிவித்துள்ள ஊரடங்கையொட்டி தமிழகத்தில் எடுக்க வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடந்தது. சென்னை, கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த 14-ந்தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கினை வருகிற 30-ந்தேதி வரையிலும் நீட்டித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் நாட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது …
பொதுமக்களுக்கு நேரடியாக உணவு வழங்க அரசு பிறப்பித்த தடையை எதிர்த்து தி.மு.க., ம.தி.மு.க. வழக்கு – ஐகோர்ட்டில் இன்று தீர்ப்பு
தேசிய ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உணவு, அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவைகளை நேரடியாக வழங்க விதிக்கப்பட்ட தமிழக அரசின் தடை உத்தரவை எதிர்த்து தி.மு.க., ம.தி.மு.க. சார்பில் தொடரப்பட்ட வழக்குகளில் இன்று தீர்ப்பு கூறப்படுகிறது. சென்னை. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் உணவு, அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவை கிடைக்காமல் சிரமத்துக்கு ஆளானவர்களுக்கு அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு அமைப்புகள், தனிநபர்கள் உதவிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில், பொதுமக்களுக்கு உணவு …
ரூ.8 கோடி மதிப்புள்ள கொரோனா தொற்று கண்டறியும் கருவிகளை அளித்த டாடா நிறுவனம் – முதல்-அமைச்சர் நன்றி
ரூ.8 கோடி மதிப்புள்ள கொரோனா தொற்று கண்டறியும் கருவிகளை அளித்த டாடா நிறுவனத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். சென்னை, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. தமிழ்நாடு அரசுக்கு தோள் கொடுக்கும் விதமாக பொதுமக்களும், நிறுவனங்களும், அமைப்புகளும் கொரோனா நோய் நிவாரண நடவடிக்கைகளுக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களின் பங்களிப்பை மனமுவந்து அளித்து வருகின்றன. மேலும், …