நாடார்கள் தொடர்ந்து புறக்கணிப்பு தொடர்ந்தால்,அரசியல் நஷ்டம் எங்களுக்கில்லை- ர.சதீஷ்மோகன்.

சில வாரங்களுக்கு முன்பு வரை,பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சரையும் சேர்த்து ஒன்பது பேர் முக்குலத்திற்கு! தமிழகத்தில் எண்ணிக்கையில் 2வது பெரிய சாதியான என் நாடார் குலத்திற்கு ஒன்றே ஒன்று.அதுவும் உப்பு,சப்பற்ற இலாகா! சமூக நீதி புரவலர் WPA சவுந்திரபாண்டியனார் வழித்தோன்றல்கள் மீது ஏனிந்த அநீதி? முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் நாடார்கள் மீதென்ன துவேஷம்?! தமிழகத்தில் கணிசமான எண்ணிக்கையிலுள்ள வன்னியர்களுக்கும் மக்கட்தொகை விகிதாச்சாரப்படி மந்திரிகளின் எண்ணிக்கை கொடுக்கவில்லை. குறிப்பிட்ட ஒரு சாதிக்கு மட்டும் வாரி வழங்கியதில் என்ன ஆனந்தமோ …