‘இஸ்லாமை போல் மார்க்சியமும் அடிப்படை வாத மதம் தான்:’ எச்.ராஜா பதிலடி

  சென்னை: கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை, ‘ஏப்., 5ம் தேதி இரவு 9:00 மணிக்கு, 9 நிமிடங்களுக்கு மின் விளக்குகளை அனைத்து மெழுகுவர்த்தி ஏற்றுங்கள்’ என, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினார். ‘இந்த அறிவிப்பு கொரோனா வைரசை அழிக்காது’ எனக்கூறி, பிரதமர் மோடியை, எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. சி.பி.எம்., கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர், டி.கே.ரங்கராஜன், ‘நோய்நொடிகள் வெம்புலி போல், நூறுவிதம் சீறு …

பனைத்தொழிலாளிகளுக்கு பேரிடர் உதவித்தொகை   வழங்க வேண்டும்! S.A .சுபாஷ் பண்ணையார் அரசுக்கு வேண்டுகோள் .

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்  பனை தொழில் செய்யும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள், ஷாப்பிங் மால்கள், பெரிய கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  அத்தியாவசிய தேவைகளான மளிகை, காய்கறி கடைகள், பெட்ரோல் நிலையங்களுக்கு நேர கட்டுப்பாட்டுடன் இயங்க அனுமதிக்கப்பட்டடுள்ளது விவசாய விளைபொருட்கள் விவசாயம் சார்ந்த  பணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி படடுள்ளது அதுபோல் விவசாயத்தை சார்ந்த  பனை தொழிலுக்கு இருக்கும் …

வீட்டு வாடகை வசூலிக்கக்கூடாது; தமிழக அரசு உத்தரவு

சென்னை: கொரோனாவால் ஊரடங்கு, தொழில்கள், கல்வி நிறுவனங்கள் மூடல் காரணமாக, தமிழகம் உள்ளிட்ட வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்களிடம், மார்ச் மாதத்திற்கான ஒரு மாத வாடகையை வசூலிக்க வேண்டாம் என தமிழக அரசு, வீட்டு உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. வீட்டு வாடகை கேட்டு யாரும் தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனாவால் தமிழகத்தில் 74பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நாடு முழுவதும் ஊரடங்கு, தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. வருமானம் இன்றி தவிக்கும் தொழிலாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு , அரசு உத்தரவிட்டடுள்ள …

விவசாய பணிக்கான தடை நீக்கம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத கடைகளுக்கு ‘சீல்’ – தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை, கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள், ஷாப்பிங் மால்கள், பெரிய கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அத்தியாவசிய தேவைகளான மளிகை, காய்கறி கடைகள், பெட்ரோல் நிலையங்களுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், விவசாய பணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டது. இதுதொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வருவாய் நிர்வாக …

கொரோனா எதிரொலி; 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அடுத்த வகுப்புக்கு உயர்த்தப்படுவர்: டெல்லி துணை முதல் மந்திரி

கொரோனா எதிரொலியாக டெல்லியில் நர்சரி முதல் 8ம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளி மாணவ மாணவியர் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் நேரடியாக அடுத்த வகுப்புக்கு சென்று விடுவார்கள். புதுடெல்லி, நாடு முழுவதும் கொரோனா அச்சம் சூழ்ந்த நிலையில், டெல்லியில் அனைத்து பள்ளிகளும் கடந்த 23ந்தேதி முதல் மூடும்படி முதல் மந்திரி கெஜ்ரிவால் உத்தரவிட்டார். இதனை அடுத்து மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. …

ஏப்.2 முதல் நிவாரணத் தொகை, ரேஷன் பொருள்கள்: அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன்

திருச்சி மாவட்டத்தில் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல், அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை மற்றும் ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என்றாா் சுற்றுலாத் துறை அமைச்சா் வெல்லமண்டி என்.நடராஜன். திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள், நிவாரண உதவித் தொகை வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, மேலும் அவா் பேசியது: நியாயவிலைக் கடைகளில் அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் முதல்வா் அறிவித்துள்ள ரூ.1000 உதவித் தொகை, அரிசி, பருப்பு, …

வெளிமாநிலங்களில் தவிக்கும் தமிழர்களுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் – தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்

வெளிமாநிலங்களில் தவிக்கும் தமிழர்களுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை, கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் தேடி வெளிமாநிலங்களுக்கு சென்ற தொழிலாளர்கள், சொந்த ஊர் திரும்ப முடியாததால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். கோவா மாநிலத்தில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். …

பிரதமர் நிவாரண நிதிக்கு பங்களிக்கும் நிறுவனங்களுக்கு சலுகை

புதுடில்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிவாரண நிதி வழங்கும் நிறுவனங்களுக்கு, கம்பெனிகளின் சட்டங்களின் கீழ் சமூக பொறுப்புணர்வு திட்டங்களுக்கான பிரிவில் செலவிட்டதாக கருதப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து, தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிதி உதவி அளிக்கும்படி, நாட்டு மக்களுக்கு பிரதமர், மோடி, வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து, ஏராளமான பிரபலங்கள், நிறுவனங்கள் தாராளமாக நிதி உதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் நிவாரண நிதியை அதிகரிக்க, மத்திய …

தொழிலாளர்களிடம் வீட்டு வாடகை வாங்கக்கூடாது: மத்திய அரசு அறிவுறுத்தல்

புதுடில்லி: இடம் பெயர்ந்து பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்களிடம் வீட்டு உரிமையாளர்கள் ஒருமாதம் வாடகை வாங்கக்கூடாது என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்து போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. இதனால் பிற மாநிலங்களுக்கு பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். பல தொழிலாளர்கள் நடைப்பயணமாக சொந்த ஊர் திரும்புகின்றனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் …