ஊரடங்கை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும் என்று டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- சென்னை, கடந்த 24-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு நடைமுறையின் போது, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அதன் உரிமையாளர்கள் திரும்ப பெற்று கொள்ளலாம். வாகன உரிமையாளர்களிடம் தினசரி காலை 7 மணி முதல், பகல் 12.30 மணி வரை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, 30 நிமிடங்களுக்கு ஒரு முறை 10 நபர்களுக்கு …
உலக அளவில் கொரோனா பலி 1.41 லட்சம்; அமெரிக்கா தொடர்ந்து முதல் இடம்
உலக அளவில் கொரோனாவுக்கு 1.41 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். பாரீஸ், உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 41 ஆயிரத்தை கடந்தும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 லட்சத்து 15 ஆயிரத்தை கடந்தும் சென்று கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பிலும், பலியிலும் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறது. அங்கு 6 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 33 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. ஸ்பெயினை பொறுத்தமட்டில் கொரோனா …
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்ற தேர்தல் – தென்கொரியாவில் ஆளும் கட்சி அமோக வெற்றி
தென்கொரியாவில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், அந்த நாட்டின் ஆளும் கட்சி அமோக வெற்றி பெற்றது. சியோல், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பல முக்கிய நிகழ்வுகளை ஒத்திவைத்துள்ள நிலையில், அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தும் வகையில் தென்கொரியா நேற்று முன்தினம் நாடாளுமன்ற தேர்தலை நடத்தியது. இதன் மூலம் ஒரு பெருந்தொற்று அபாயத்துக்கு மத்தியில் முரண்பாடுகளை களைந்து, தேர்தல் எனும் ஜனநாயக திருவிழாவை எப்படி நடந்த வேண்டும் என்பதற்கு தென்கொரியா முன்மாதிரியாக …
கொரோனா சிகிச்சை விரைவு பரிசோதனை கருவிகள் உள்பட இந்தியாவுக்கு 6 லட்சம் மருத்துவ உபகரணங்கள் – சீனா அனுப்பி வைத்தது
இந்தியாவுக்கு விரைவு பரிசோதனை கருவிகள் உள்பட 6½ லட்சம் மருத்துவ உபகரணங்களை விமானம் மூலம் சீனா அனுப்பி வைத்தது. பீஜிங், சீனாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, 2 மாதங்களாக மூடிக்கிடந்த தொழிற்சாலைகள் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளன. பல்வேறு நாடுகள், கொரோனாவின் பிடியில் இருந்து மீளாததால், அதை பயன்படுத்தி, கொரோனா சிகிச்சை, பரிசோதனை தொடர்பான மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்பு உடைகள் உற்பத்தியை தீவிரப்படுத்தி உள்ளன. அந்த வகையில், இந்தியா கேட்டுக்கொண்டதால், 6 லட்சத்து 50 ஆயிரம் …
ஊரடங்கால் ஆட்டோவில் செல்ல போலீசார் அனுமதி மறுப்பு: வயதான தந்தையை 1 கி.மீ. தூரம் தோளில் சுமந்து சென்ற மகன்
ஊரடங்கால் ஆட்டோவில் செல்ல போலீசார் அனுமதிக்காததால், வயதான தந்தையை 1 கி.மீ. தூரம் மகன் தோளில் சுமந்து சென்ற உருக்கமான சம்பவம் கேரளாவில் நடந்து உள்ளது. கொல்லம், கொரோனா நோய்க்கிருமி பரவுவதை தடுப்பதற்காக நாடு முழுவதும் வருகிற மே 3-ந் தேதி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கின் காரணமாக நோய்க்கிருமி வேகமாக பரவுவது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. என்றாலும் சில சந்தர்ப்பங்களில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்துவிடுகின்றன. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் கேரளாவில் நடந்து …
இந்தியாவில் கொரோனா 420 பேரின் உயிரை பறித்தது: 5 மாநிலங்களில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு
இந்தியாவில் 5 மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் நாட்டில் 420 பேரின் உயிரை இந்த வைரஸ் காவு வாங்கி இருக்கிறது. புதுடெல்லி, இந்தியாவில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையிலும், கொரோனா தனது வேலையை காட்டி கொண்டுதான் இருக்கிறது. ஏற்கனவே மராட்டியம், டெல்லி மற்றும் தமிழகத்தில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி வேகமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது அந்த பட்டியலில் மத்திய பிரதேசமும், ராஜஸ்தானும் இணைந்துள்ளன. …
40 நாட்கள் ஊரடங்கு; விமானங்களில் முன்பதிவு செய்தவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி கொடுக்க வேண்டும் – மத்திய அரசு உத்தரவு
மார்ச் 25-ந் தேதி முதல் மே மாதம் 3-ந் தேதி வரை விமானங்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்து இருந்தவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி கொடுக்க வேண்டும் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் கடந்த 14-ந்தேதி வரையும், 15-ந்தேதி முதல் அடுத்த மாதம் 3-ந்தேதி வரையும் என 2 கட்டங்களாக 40 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கையொட்டி அனைத்து சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களும் …
கொரோனா பதித்தவர்களை மது பாதுகாக்காது – உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டம்
கொரோனா பதித்தவர்களை மது பாதுகாக்கும் என சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரவி வந்த வேளையில், அதை உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. எந்த வகை மதுவும், உடல்நலத்துக்கு கெடுதல் ஏற்படுத்தக் கூடியதுதான். உலகளவில் ஆண்டுக்கு 30 லட்சம் பேர் மதுபானங்களால் ஏற்படுகிற பாதிப்பால் மரணம் அடைகின்றனர். தவிரவும் பல்வேறு பாதிப்புகளை மதுபானங்கள் ஏற்படுத்துகின்றன. குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிறவர்கள் சிந்திக்கும் திறனையே இழந்து விடுகிறார்கள். பல்வேறு குற்றங்களை தயக்கமே இன்றி செய்து சட்டத்தின் பிடியில் சிக்குவதையும் பார்க்க …
53 நாடுகளில் 3,300 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு
53 நாடுகளில் 3,300 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதுடெல்லி, உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இந்த நிலையில் 53 உலக நாடுகளில் 3,336 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதித்து இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. வெளிநாடுகளில் கொரோனா வைரசுக்கு 25 இந்தியர்கள் பலியாகியும் உள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு பெரிய அளவில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதால், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க முடியாத சூழல் உள்ளது; எனவே அவர்கள் …
கொரோனா ஊரடங்கு 200 ஆதரவற்றவர்களுக்கு நடிகர் வின்ஸ்லி வடவை நண்பர்கள் குழு இணைந்து 21நாட்கள் உணவு வழங்கினார் .
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்ட்டுள்ளது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு தமிழக அரசு 1,000 ரூபாய் நிவாரண நிதி அளித்து வருகிறது. இதனை தவிர்த்து பல்வேறு அரசியல் கட்சியினர், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஏழை, எளியோர், வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு நிவாரண உதவிகளையும், அத்தியாவசியப் பொருள்களையும் வழங்கி வருகின்றனர். நாடார் சமுதாயத்தை சேர்ந்த வதம் திரைப்பட நடிகர் வின்ஸ்லி வடவை நண்பர்கள் குழு இணைந்து 21நாட்கள் …