கொரோனா வைரசானது நுரையீரலை மட்டுமல்லாது சிறுநீரகத்தையும் பாதிக்கும் என வெளியாகியுள்ள புதிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுடெல்லி, உலகமெங்கும் பரவி வருகிற கொரோனா வைரஸ் தொற்றுநோய், நோயாளிகளின் நுரையீரலை பாதித்து விடுகிறது. இதனால் சுவாசிக்க முடியாத நிலைக்கு நோயாளிகள் தள்ளப்பட்டு, நிலைமை மோசமாகிறது. இதுபற்றிய விழிப்புணர்வு இப்போது ஓரளவுக்கு எல்லோருக்கும் வந்து விட்டது. இந்த நிலையில், இந்த வைரஸ், நுரையீரலை மட்டுமல்லாது சிறுநீரகத்தையும் பாதிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். சர்வதேச சிறுநீரக சொசைட்டியும் இது …
30 கோடி டன் உணவு தானிய உற்பத்தி – மத்திய அரசு இலக்கு
2020-2021 சாகுபடி ஆண்டில் 30 கோடி டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. புதுடெல்லி, ஜூலை மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலம், சாகுபடி ஆண்டாக கருதப்படுகிறது. 2019-2020 சாகுபடி ஆண்டில், 29 கோடியே 20 லட்சம் டன் உணவு தானியம் உற்பத்தி ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், 2020-2021 சாகுபடி ஆண்டில் சம்பா பயிர்கள் விதைப்பு பணி குறித்து மத்திய வேளாண் அமைச்சகத்தின் ஆணையாளர் எஸ்.கே.மல்கோத்ரா அனைத்து மாநில …
சென்னையில் 79% குற்றங்கள் குறைந்தன: காவல்துறை தகவல்
ஊரடங்கு காலத்தில் சென்னையில் அனைத்து குற்றங்களும் 79% குறைந்துள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர். இதனால் சென்னை மாநகரில் குற்றங்களும் பெருமளவில் குறைந்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் கொலை வழக்கில் 44%, கொள்ளை வழக்கில் 75%, வீடு புகுந்து திருடுதல் வழக்கில் 59% , திருட்டு வழக்கில் 81%, விபத்து சிறப்புகளில் 75% என ஒட்டுமொத்தமாக 79% அனைத்து குற்றங்களும் …
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
தஞ்சாவூர்: கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது எனத் துணைவேந்தர் கோ. பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: கரோனா நோய்த் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. எனவே, 2019-20 கல்வியாண்டின் இறுதியில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த வளாகக் கல்வித் தேர்வுகளும், மே 2ஆம் தேதி தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தொலைநிலைக் கல்வி …
அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்- அமைச்சர் எச்சரிக்கை
அத்தியாவசிய பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றாலோ அல்லது பதுக்களில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று அமைச்சர் காமராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் நல வாரிய உறுப்பினர்களுக்கு விலையில்லா நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி திருவாரூர் விளமல் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் கட்டுமான தொழிலாளர் மற்றும் …
ஊரடங்கு முழுக்க அன்லிமிட்டெட் அழைப்புகள், டேட்டா இலவசமாக வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்
இந்தியாவில் பொது மக்களுக்கு அன்லிமிட்டெட் அழைப்புகள், டேட்டா உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு முழுக்க அன்லிமிட்டெட் அழைப்புகள், டேட்டா இலவசமாக வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தற்சமயம் அது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் மே 3 ஆம் தேதி வரை பொது மக்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், டேட்டா, டிடிஹெச் போன்றவை இலவசமாக வழங்க மத்திய அரசு உத்தரவிட …
விளைபொருட்களை விற்க செல்லும் விவசாயிகளுக்கு யாரும் எந்த தடையும் விதிக்கக் கூடாது – முதல்வர் பழனிசாமி
தமிழகத்தில் எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம், விளைபொருட்களை விற்க செல்லும் விவசாயிகளுக்கு யாரும் எந்த தடையும் விதிக்கக் கூடாது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் பழனிசாமி மேலும் கூறியதாவது:- “ சேலம் மாவட்டத்தில் நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதித்த 24 பேரில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் . சேலம் மாவட்டத்தில் 9 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. …
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு: பலி எண்ணிக்கை 35 ஆயிரம் ; 2.2 கோடி பேர் வேலை இழப்பு
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் பலி எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது. 2.2 கோடி பேர் வேலை இழந்து உள்ளனர். வாஷிங்டன் உலகெங்கிலும் கொரோனா வைரஸ் தொற்று நோய் தொற்றால் 2,152,000 பேர் பாதிக்கபட்டு உள்ளனர். கிட்டத்தட்ட 145,000 உயிரிழந்து உள்ளனர் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி அமெரிக்காவில் 667,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்து …
விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் உதவும்- பிரதமர் மோடி
விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் உதவும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களுக்கு மத்திய அரசு பல்வேறு நிவாரணங்களை வழங்கி வருகின்றன. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அமலில் உள்ள நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறும்பொழுது, வங்கிகள் வழக்கம்போல் இயங்குவதை ரிசர்வ் வங்கி உறுதி …
ஏப்ரல் 20-ந்தேதிக்கு பிறகு இயங்க மேலும் பல சேவைகளுக்கு மத்திய அரசு அனுமதி
ஏப்ரல் 20-ந்தேதிக்கு பிறகு இயங்க மேலும் பல சேவைகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. புதுடெல்லி கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கின் போது எந்தெந்த சேவைகள் கிடைக்கும்? எவை கிடைக்காது என்பதை மத்திய அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. அதே சமயம் ஏப்ரல் 20-க்கு பிறகு சில கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி அனைத்து வித விவசாய …