தமிழகத்தில் 411 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளது. இன்று (ஏப்.,03) ஒரே நாளில் மட்டும் 102 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் நேற்று(ஏப்.,2) வரை 309 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் தேசிய அளவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருந்தது. இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், தமிழகத்தில், 3,684 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இதில் 2,789 பேருக்கு கொரோனா இல்லை. 411 பேருக்கு …

‘இஸ்லாமை போல் மார்க்சியமும் அடிப்படை வாத மதம் தான்:’ எச்.ராஜா பதிலடி

  சென்னை: கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை, ‘ஏப்., 5ம் தேதி இரவு 9:00 மணிக்கு, 9 நிமிடங்களுக்கு மின் விளக்குகளை அனைத்து மெழுகுவர்த்தி ஏற்றுங்கள்’ என, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினார். ‘இந்த அறிவிப்பு கொரோனா வைரசை அழிக்காது’ எனக்கூறி, பிரதமர் மோடியை, எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. சி.பி.எம்., கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர், டி.கே.ரங்கராஜன், ‘நோய்நொடிகள் வெம்புலி போல், நூறுவிதம் சீறு …

44 தடை உத்தரவை கடுமையாக்க நேரிடும்: முதல்வர் இ.பி.எஸ்.,

சென்னை: அத்தியாவசியமின்றி மக்கள் வெளியே வந்தால், 144 தடை உத்தரவை கடுமையாக்க நேரிடும் என முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார். வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள முகாம்களை முதல்வர் இ.பி.எஸ்., ஆய்வு செய்தார். இதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான வசதி செய்யப்பட்டுள்ளது. முகாம்களில் உள்ள தொழிலாளர்களை சந்தித்தேன். வெளிமாநிலங்களில் இருந்து வேலைக்காக வந்து தமிழகத்தில் தங்கியுள்ள தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகளை தமிழக அரசு செய்துள்ளது. உணவு,உடை, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் …

டில்லி மாநாட்டில் பங்கேற்ற 960 வெளிநாட்டினர் விசா ரத்து

புதுடில்லி: டில்லியில், தப்லிக் – இ – ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 960 வெளிநாட்டினர்களின் விசா ரத்து செய்யப்பட்டது. டில்லியில், நிஜாமுதீன் பகுதியிலிருக்கும், தப்லிக் – இ – ஜமாத் அமைப்பின் தலைமை அலுவலகத்தில், மார்ச், 8 – 10ம் தேதிகளில், பிரசங்க கூட்டம் நடந்தது. இதில், நம் நாட்டில் இருந்தும், மலேஷியா, வங்கதேசம், இந்தோனேஷியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த, ‘ஓரிடத்தில் அதிகமானோர் கூடக் கூடாது’ என, டில்லி போலீசார் …

கரோனாவுக்கு அமெரிக்காவில் மருந்து கண்டுபிடிப்பு!

புதிதாக கரோனா வைரஸ் தடுப்பு மருந்தொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை எலிகளுக்குச் செலுத்திப் பரிசோதித்துப் பார்த்ததில் நல்ல எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தியிருப்பது அறியப்பட்டுள்ளது. தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான இந்த ஆய்வின் முடிவு பற்றி இபயோமெடிசின் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பிட்கோவேக், அதாவது பிரிட்ஸ்பர்க் கரோனா வைரஸ் வேக்சின், என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த மருந்தை எலிகளுக்குச் செலுத்திப் பரிசோதித்ததில், கரோனா வைரஸுக்கு எதிரான எதிர்ப்பு ஆற்றலை இரு வாரங்களிலேயே அவை மிக அதிகளவில் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. கரோனா …

ஒரே மாதத்தில் 20 லட்சம்: அமெரிக்காவில் சூடு பிடிக்கும் துப்பாக்கி விற்பனை

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் உச்சத்தை எட்டிவருகிறது. தற்போது வரை, 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும், 10 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில், 2.45 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பல லட்சம் மக்கள் வேலையிழந்துள்ளனர். இதனால் லட்சக்கணக்கான குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன. அடுத்த வேளை உணவுக்கு கூட வழியற்ற சூழலில், பல குடும்பங்கள் தவித்து …

அனைத்து மதத் தலைவர்களுடன் தலைமைச்செயலாளர் இன்று ஆலோசனை

அனைத்து மதத் தலைவர்களுடன் தலைமைச்செயலாளர் சண்முக இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை, அனைத்து மதத் தலைவர்களுடன் இன்று பிற்பகல் 3 மணிக்கு தமிழக தலைமைச்செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா குறித்து மத ரீதியாக கருத்துக்கள் வெளியாவதை தவிர்க்க வேண்டுமென இந்த ஆலோசனையின் போது வலியுறுத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா தனது நாட்டினரை இந்தியாவில் இருந்து அனுப்ப தொடங்குகியது – தூதரக அதிகாரி

நாடு திரும்ப விரும்பும் தனது நாட்டினரை திருப்பி அனுப்பத் தொடங்கியுள்ளதாக மூத்த அமெரிக்க தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார். வாஷிங்டன் 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 30,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் 350 க்கும் மேற்பட்ட விமானங்களில் அமெரிக்கா திரும்பி உள்ளனர் கொரோனா வைரஸ் தொற்றுநோயைப் பரவுவதைத் தடுக்க இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நிலையில் உள்ள இந்தியாவில் இருந்து, நாடு திரும்ப விரும்பும் தனது நாட்டினரை திருப்பி அனுப்பத் தொடங்கியுள்ளதாக மூத்த அமெரிக்க தூதர் …

ஊரடங்கு மீறுபவர்கள் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என்று பிலிப்பைன்ஸ் அதிபர்

ஊரடங்கு மீறுபவர்கள் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மணிலா, சீனாவின் ஹூபெய் மாகாணம் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தெற்காசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்சிலும் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளது. பிலிப்பைன்சில் தற்போதைய நிலவரப்படி 2,633 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 107 பேர் மீண்ட நிலையில், 51 – பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலைக்கட்டுப்படுத்தும் வகையில், …

You cannot copy content of this page