சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து உருவான கொரோனா வைரஸ் தொற்று பல்வேறு நாடுகளை பாதித்துள்ளது. உலகம் முழுவதும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப் பட்டு உள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். பலியானவர்களில் பாலின விகிதம் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதில் பெண்களை விட ஆண்கள் மூன்று மடங்கு பலியாவதாக கண்டறியப்பட்டுள்ளது. உயிர்பலியாகும் பெண்களின் எண்ணிக்கை 3.4 சதவீதமாக இருக்கும்பட்சத்தில் ஆண்களின் பலி எண்ணிக்கை 9.2 ஆக காணப்படுகிறது. இது தவிர கொரோனா பாதித்த இத்தாலி, ஸ்பெயின், …
பிரதமர் விவகாரத்தில் நான் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்: மம்தா
கோல்கட்டா: பிரதமர் விவகாரத்தில் நான் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும் என நேற்று பிரதமர் மோடி கொரோனா தொடர்பாக வெளியிட்ட வீடியோ குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். நேற்று பிரதமர் மோடி வீடியோ மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அதில் ‘கொரோனா வைரசை தோற்கடிக்க நாளை (ஏப்.5ம் தேதி) இரவு, 9:00 மணிக்கு, 9 நிமிடங்கள், மக்கள் அனைவரும் மின் விளக்குகளை அணைத்து, தீபம், டார்ச் லைட், மெழுகுவர்த்தி, மொபைல் போன் விளக்கு களை …
ஊரடங்கை மீறி கர்நாடகாவுக்குள் நுழைந்த வாலிபர்கள்; தடுத்த போலீஸ்காரர் கல்வீச்சில் காயம்
கேரளாவில் இருந்து கர்நாடக எல்லைக்குள் ஊரடங்கை மீறி நுழைந்த வாலிபர்களை தடுத்த காவல் அதிகாரி கல்வீச்சில் காயம் அடைந்து உள்ளார். பெங்களூரு, நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த மார்ச் 24ந்தேதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அன்று நள்ளிரவு முதல் வரும் 14ந்தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும். இதனால் பொதுமக்கள் வீடுகளை …
நெல்லையில் கரோனா பாதிப்பு 36ஆக உயர்வு
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 36ஆக உயர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட 6 பேரும் தில்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கரோனா நோய் தொற்று பரவலைத் தடுக்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தனிமைச் சிகிச்சை பிரிவு இயங்கி வருகிறது. இதில் தனிமை சிகிச்சை பிரிவு, கண்காணிப்பு பிரிவு, ஆய்வு …
சிங்கப்பூரில் 1 மாதம் ஊரடங்கு; பிரதமர் அறிவிப்பு
சிங்கப்பூரில் 1 மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து பிரதமர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். சிங்கப்பூர், சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து உள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கையாக வரும் 7ந்தேதி முதல் அடுத்த 1 மாதத்திற்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என அந்நாட்டின் பிரதமர் லீ சீன் லூங் அறிவித்து உள்ளார். அதனால் அத்தியாவசிய சேவைகள் மற்றும் முக்கிய பொருளாதார பிரிவுகளை தவிர்த்து பெருமளவிலான பணியிடங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்நாட்டில் கொரோனா பாதிப்புக்கு …
சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கு உதவ ரோபோக்கள்
சென்னை : சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கவும் மருந்துகளை வழங்கவும் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து இன்று(ஏப்.,3) சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. …
இத்தாலியில் குறைந்து வரும் கொரோனாவின் வேகம்
ரோம் : இத்தாலியில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்து பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தற்போது ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீனாவில் பரவிய கொரோனா சீனாவையடுத்து பல நாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி மக்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. இதில் இத்தாலியில் பாதிப்பு சற்று அதிகமாகவே இருந்து வந்தது. தினமும் ஆயிரக் கணக்கானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் …
தமிழகத்தில் சமூக பரவல் இல்லை: சுகாதார செயலர்
சென்னை: கொரோனா பாதிப்பில், தமிழகம் இரண்டாவது நிலையில் தான் உள்ளதாகவும், சமூக பரவலாக மாறவில்லை என சுகாதார செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கண்காணிப்பின் கீழ் 90,415 பேர் உள்ளனர். வீடு முடிந்து 5080 பேர் திரும்பியுள்ளனர். 3,684 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், நேற்று வரை 309 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இன்று 102 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை …
கொரோனா: சீனாவிடம் இழப்பீடு கேட்கும் சர்வதேச நீதிபதிகள் கவுன்சில் மனு
லண்டன்: கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவ காரணமாக இருந்த சீனாவிடம் இழப்பீடு கேட்டு சர்வதேச நீதிபதிகள் கவுன்சில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலை அணுகி உள்ளது இது குறித்து சர்வதேச நீதிபதிகள் கவுன்சில் கூறுகையில் ‘ கொரோனாவை உலக அளவில் பரப்ப காரணமாக இருந்த சீனா உலக அளவில் மக்களிடையே மன அழுத்தத்தையும் சமூக பாதிப்பையும், உலக பொருளாதாரத்தையும் வெகுவாக பாதிப்பு அடைய செய்துள்ளது. இது தொடர்பாக சீனா உலக நாடுகளுக்கு இழப்பீடு …
ஏப்ரல் 14 ந்தேதிக்கு பிறகு: ஊரடங்கு உத்தரவு படிப்படியாகவே தளர்த்தப்படும் வாய்ப்பு
ஏப்ரல் 14 ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு உடனடியாக தளர்த்த்ப்படாது. படிப்படியாகவே தளர்த்தப்படும். புதுடெல்லி இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2500 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 56 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவைப் பொருத்தவரை தமிழகத்தில் தொடக்கத்தில் நிலைமை ஓரளவு கட்டுக்குள்தான் இருந்தது என்றே கூறலாம். அரசாங்கத்தின் கூற்றுப்படி, மார்ச் 14 ஆம் தேதி நடந்த டெல்லி நிஜாமுதீன் கூட்டம் காரணமாக கொரோனா வைரஸ் …
