பிரதமர் மோடி அழைப்பு விடுத்த விளக்கேற்றும் நிகழ்வுக்கான நடைமுறை வெளியீடு

பிரதமர் மோடி அழைப்பு விடுத்த, விளக்கேற்றும் நிகழ்வுக்கான நடைமுறை வெளியிடப்பட்டுள்ளது. புதுடெல்லி, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றும்பொழுது, வருகிற 5ந்தேதி (நாளை) இரவு 9 மணிக்கு உங்கள் இல்லங்களில் எரியும் அனைத்து விளக்குகளையும் அணைத்து விடுங்கள். உங்கள் வீட்டின் வாசற்படியில் இருந்தோ அல்லது பால்கனியில் இருந்தோ, ஒளியேற்றப்பட்ட மெழுகுவர்த்தி, அகல் விளக்கு, டார்ச் லைட் அல்லது உங்கள் மொபைல் போனின் டார்ச் ஒளியை ஏந்தி 9 நிமிடங்கள் நில்லுங்கள் என கூறினார். இந்த நிகழ்வுக்கான …

கொரோனா சிகிச்சையின் போது மருத்துவ ஊழியர்களை அவமதித்தவர்கள் மீது வழக்கு பதிவு – உத்தரபிரதேச போலீசார் நடவடிக்கை

உத்தரபிரதேசத்தில், ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மருத்துவ ஊழியர்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதால், அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். லக்னோ, டெல்லி நிஜாமுதீன் பகுதியில் கடந்த மாதம் நடைபெற்ற தப்லிக் ஜமாத் மாநாட்டில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களில் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி இருப்பது தெரியவந்து உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்றவர் கள் உத்தரபிரதேசம், தெலுங் கானா, ஆந்திரா, தமிழ்நாடு …

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கிறது வீட்டை விட்டு வெளியே வந்தால் ‘முக கவசம் அணிவது கட்டாயம்’ – மத்திய அரசு அவசர உத்தரவு

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று மத்திய அரசு அவசர உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. புதுடெல்லி, உலகையே அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ், இந்தியாவில் வேகமாக பரவ தொடங்கி இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் நோய்க்கிருமி பரவும் வேகத்தை முழுமையாக கட்டுப் படுத்த முடியவில்லை. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 3 …

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை

தமிழகத்தில் கோடைவெயில் மக்களை வாட்டி வந்தது. இந்நிலையில் மதுரை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிகாலை முதல் மழை பெய்தது மதுரையில் அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடிமற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இடி மின்னலுடன் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.

திட்டமிட்டபடி நவம்பரில் தேர்தல்: டிரம்ப்

வாஷிங்டன்: “கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருந்தாலும், திட்டமிட்டபடி, நவம்பர், 3ம் தேதி, அதிபர் தேர்தல் நடைபெறும்,” என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டவட்டமாக கூறியுள்ளார். அமெரிக்காவில், வரும் நவம்பர் மாதம், அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. குடியரசு கட்சி சார்பில், நாட்டின் அதிபராக இருக்கும் டொனால்டு டிரம்ப், மீண்டும் களமிறங்க இருக்கிறார். ஜனநாயக கட்சி சார்பில், வேட்பாளரை தேர்வு செய்யும் தேர்தல், பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமெரிக்காவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 2.75 …

கொரோனா:சீனாவில் 95 போலீசார், 45 மருத்துவ ஊழியர்கள் பலி

பீஜிங்: சீனாவில் கொரோனா வைரசுக்கு 95 போலீசார் 45 மருத்துவ ஊழியர்கள் பலியாகி உள்ளதாக சீன நாட்டின் அதிகாரப்பூர்வ செய்திகள் தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள வூஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவ துவங்கியது. இதனையடுத்து வைரஸ் சிகிச்சையை குணப்படுத்த தீவிரம் காட்டி வந்தது.சீன அரசு. இதற்காக 42 ஆயிரம் மருத்துவ ஊழியர்களை களம் இறக்கப்பட்டனர். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 14 தற்காலிக மருத்துவமனைகளை கட்டியது. வூஹான் மாகாணத்தில் 812639 பேர் …

அமெரிக்காவுக்கு மீண்டும் சோதனை மிரட்டும்  இரு புயல்கள்

கலிபோர்னியா: கொரோனா வைரஸ் அமெரிக்காவை நிலைகுலைய வைத்துள்ள நிலையில், அடுத்து வரக்கூடிய இரு புயல்கள் கலிபோர்னியா மாகாணத்தை புரட்டிபோட்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. முதல் புயல் சனிக்கிழமை(ஏப்.4) கரைக்கு வந்து மாநிலத்தின் வடக்குபகுதியில் மூன்றில் இரண்டு பகுதிக்கு கடுமையான மழை பெய்யும், பின்னர் சியரா மற்றும் வடக்குகலிபோர்னியா மலைகளுக்கு இடைப்பகுதியில் பனி மழையை கொண்டுவரும். பின்னர் கிழக்கு நோக்கி நகர்ந்து பனி மழையை தரும்.. இரண்டாவது புயல் மேலும் சக்திவாய்ந்ததாகத் தோன்றி ஞாயிற்றுக்கிழமை(ஏப்.5) கரைக்கு வருகிறது, அப்போது …

பெட்ரோல் விலை சரிவு: ரஷ்யாவுக்கு சவுதி அரேபியா கண்டிப்பு

துபாய்:கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, உலகம் முழுவதும் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், கச்சா எண்ணெய் விலை சரிந்தது. இந்நிலையில் ரஷ்யா, பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகளுடன் சவுதி அரேபியா ஒப்பந்த குழுவிலிருந்து வெளியேறிவிட்டதாக கூறிவந்தது. இதைதொடர்ந்து சவுதி அரேபியா, ரஷ்யாவின் நிலையை கண்டித்துள்ளது. இதற்கிடையே பெட்ரோல் உற்பத்தியாளர்கள் அவசர கூட்டத்திற்கு முன்னதாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது, மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே பெட்ரோல் விலை கடுமையாக சரியத் தொடங்கியது. கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 24 டாலராக …

கொரோனாவுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் 15 பேர் பலி

வாஷிங்டன்: கொரோனாவுக்கு அமெரிக்காவில் 6 இந்தியர்கள் உட்பட உலகம் முழுவதும், 15 இந்தியர்கள் பலியாகி உள்ளனர். கொடிய ‘கொரோனா’ வைரஸ், உலகம் முழுவதும் பரவி உயிர் பலி வாங்கி வருகிறது. உலகளவில் இதுவரை 11.88 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 64,103 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் 15 பேர் கொரோனா தாக்கி பலியாகி உள்ளது தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் 6 இந்தியர்களும், இத்தாலியில் 5 பேரும், ஐக்கிய அரபு எமிரேட்சில் 2 பேர், ஈரான், …

செப்டம்பர் வரை இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம்: ஆய்வில் தகவல்

புதுடில்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,500-ஐ கடந்துள்ளது. சமூக பரவலை தடுக்க ஏப்.,14 வரை ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஏப்.,14க்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்கும் திட்டமில்லை என மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் புள்ளிவிவரங்களை ஆய்வு செய்து, ஊரடங்கு செப்டம்பர் வரை நீட்டிக்கப்படலாம் என அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது. பிஸினஸ் டுடே மற்றும் மணி கண்ட்ரோல் தளத்தில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்க ஆய்வு நிறுவனமான பாஸ்டன் ஆலோசனை குழு, ஒவ்வொரு நாடுகளிலும் …

You cannot copy content of this page