கொரோனா வைரஸின் முழு மரபணுவையும் வரிசைப்படுத்துவதில் குஜராத் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் வெற்றி கண்டு உள்ளனர். அகமதாபாத் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்று 12,380 ஆக உயர்ந்தூள்ளது. இறப்பு எண்ணிக்கை 414 ஐ எட்டியுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பில் இந்தியாவில் திருப்புமுனையாக குஜராத் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தின் (ஜிபிஆர்சி) விஞ்ஞானிகள் கொரோனா வைரஸின் முழு மரபணுவையும் வரிசைப்படுத்துவதில் வெற்றி கண்டு உள்ளனர். குஜராத்தின் முதல் மந்திரி …
கொரோனாவுக்கு தடுப்பு ஊசி கண்டு பிடித்தால் மட்டுமே இயல்பு நிலை திரும்பும் – ஐ.நா. பொதுச்செயலாளர்
கொரோனா வைரசுக்கு தடுப்பு ஊசியை கண்டுபிடிப்பது மட்டுமே உலகை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவும் என ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு தடுப்பு ஊசி கண்டு பிடித்தால் மட்டுமே இயல்பு நிலை திரும்பும் – ஐ.நா. பொதுச்செயலாளர் சொல்கிறார் ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் ஜெனிவா: கொரோனா தடுப்பு ஊசியை கண்டுபிடிக்க குறைந்தது ஒரு ஆண்டு ஆகலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஐ.நா. பொதுச் …
மத்திய கிழக்கு நாடுகளில் தவிக்கும் இந்திய தொழிலாளர்களை மீட்க ராகுல் காந்தி கோரிக்கை
மத்திய கிழக்கு நாடுகளில் தவிக்கும் இந்திய தொழிலாளர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:- மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் தொழில்கள் முடக்கத்தால் ஆயிரக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். நாடு திரும்ப விரும்பும் அவர்கள், விமானங்கள் ரத்தால் வர முடியவில்லை. ஆகவே, மத்திய அரசு …
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 3081 ஆக உயர்வு- மும்பையில் மேலும் 107 பேருக்கு பாதிப்பு
மகாராஷ்டிராவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3081 ஆக உயர்ந்துள்ளது. மும்பை: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,380 …
டெல்லியில் பீசா டெலிவரி பாய்க்கு கொரோனா… தனிமைப்படுத்தப்பட்ட 72 குடும்பங்கள்
டெல்லியில் பீசா டெலிவரி செய்த வாலிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால், அவர் டெலிவரி செய்த 72 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. புதுடெல்லி: டெல்லியின் தெற்கு பகுதியில் உள்ள மால்வியா நகர் பகுதியில் பீசா டெலிவரி செய்யும் 19 வயது வாலிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களாக அவருக்கு லேசான அறிகுறிகள் இருந்த நிலையில், சமீபத்தில் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. ஏப்ரல் 14ம்தேதி நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவருடன் டெலிவரி …
உலகம் முழுவதும் கொரோனாவுக்கு ஒரே நாளில் 7,960 பேர் பலி
கொரோனா வைரஸ் கோர தாண்டவத்துக்கு நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 7 ஆயிரத்து 960 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரமாக உயர்ந்தது. கொரோனா வைரஸ் கோர தாண்டவத்துக்கு நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 7 ஆயிரத்து 960 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரமாக உயர்ந்தது. நியூயார்க்: கொரோனா பரவ தொடங்கிய கடந்த 3 மாதங்களில் நேற்றுதான் அதிகமானோர் உயிரிழந்து இருக்கிறார்கள். …
கைகளை கழுவ சானிடைசருக்கு பதில் ‘வோட்கா’வை பயன்படுத்த ஜப்பான் முடிவு
கைகளை கழுவ கிருமி நாசினிக்கு பதிலாக ஆல்கஹாலையே நேரடியாக பயன்படுத்த ஜப்பான் சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. டோக்கியோ: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ‘சானிடைசர்’ எனப்படும் கிருமி நாசினி மூலம் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக உலகின் பெரும்பாலான நாடுகளில் கிருமி நாசினிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் ஜப்பானிலும் தற்போது கிருமி நாசினிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. ஒவ்வொரு கிருமி நாசினியிலும் 70 முதல் …
அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு 50 ஆயிரம் பேர் பலியாவார்கள்- டாக்டர் எச்சரிக்கை
நியூயார்க் மாகாணத்தில் கொரோனா வைரசுக்கு 50 ஆயிரம் பேர் பலியாவார்கள் என டாக்டர் ஒருவர் எச்சரிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளார். நியூயார்க்: அமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஏற்கனவே 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி விட்டனர். அங்கு பலி எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் கணித்துள்ளனர். இந்நிலையில், நியூயார்க் ஆஸ்பத்திரி ஒன்றில் பணியாற்றும் டாக்டர் மர்லின் கேப்லன் என்பவர், நியூயார்க் மாகாணத்தில் 50 ஆயிரம்பேர் பலியாவார்கள் என்று கணித்துள்ளார். …
இந்தியா அனுப்பி வைத்த 28 லட்சம் மாத்திரை பாக்கெட்டுகள் இங்கிலாந்து சென்றன
இந்தியா அனுப்பி வைத்த 28 லட்சம் பாராசிட்டமால் மாத்திரை பாக்கெட்டுகள் இங்கிலாந்து சென்றடைந்தன. இந்தியாவுக்கு இங்கிலாந்து அரசு புகழாரம் சூட்டியது. லண்டன்: கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து, சில அத்தியாவசிய மருந்து பொருட்களின் ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்து இருந்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் வேண்டுகோளை ஏற்று இந்த தடையை நீக்கியது. இதற்கிடையே, இங்கிலாந்து கோரிக்கையை ஏற்று, காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும், 28 லட்சம் பாராசிட்டமால் மாத்திரை பாக்கெட்டுகளை கப்பல் மூலம் இந்தியா அனுப்பி வைத்தது. இந்த …
பாகிஸ்தானில் கொரோனா வைரசுக்கு 117 பேர் பலி
பாகிஸ்தானில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 117 பேர் பலியாகி உள்ளனர். இஸ்லாமாபாத்: சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன. பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்ததையடுத்து ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் …