புதுடில்லி: இந்தியாவில் 325 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. டில்லியில் நிருபர்களை சந்தித்த சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால் கூறியதாவது: இந்தியாவில் 325 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை. உலக சுகாதார அமைப்பினருடன் நேற்று சுகாதார அமைச்சர், இணையமைச்சர் ஆகியோர் வீடியோ கான்பரன்ஸ் மூலம், கொரோனா தடுப்பு மற்றும் பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர். புதுச்சேரியின் மாஹேயில் கடந்த 28 நாட்களாக கொரோனா தொற்று ஏற்பட்டதாக தகவல் இல்லை. …
டிஜிட்டல் க்யூஆர் குறியீடு மூலம் கொரோனாவை தடுக்கும் சீனா!
பீஜிங்: பொது மக்களின் ஸ்மார்ட் போன்களில் சிகப்பு, மஞ்சள், பச்சை என க்யூஆர் ஆரோக்கிய குறியீடுகளை ஒதுக்கி, அதன் மூலம் கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்தி வருகிறது சீனா. இதனை ஜப்பான், ரஷ்யா நாடுகளும் பின்பற்ற தொடங்கியுள்ளன. கொரோனா வைரஸ் முதலில் பரவத் தொடங்கிய சீனாவின் வூஹான் நகரம் உள்ளிட்ட பல நகரங்களில், மூன்று மாத ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. பச்சை நிற க்யூஆர் ஆரோக்கிய …
ஸூம் செயலி பாதுகாப்பானது இல்லை: மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
ஸூம் செயலி பாதுகாப்பானது இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புதுடெல்லி, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், ஐடி துறை உள்பட தனியார் துறை நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி அளித்துள்ளது. இந்த சூழலில், ஊழியர்கள் பலர் வீட்டில் இருந்தபடி தங்கள் மேலதிகாரிகளை வீடியோ கான்பரன்சிங் மூலமாக தொடர்பு கொண்டு கலந்துரையாடுகின்றனர். இதனால், ஸூம் என்ற …
சென்னை பெருநகர மாநகராட்சியில், கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியல் மண்டல வாரியாக
சென்னை பெருநகர மாநகராட்சியில், கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியல் மண்டல வாரியாக விவரம் வருமாறு சென்னை சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 214 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதன்படி, உறுதி செய்யப்பட்ட நபர்கள் சென்னையில் எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு பேர் உள்ளனர் என்ற மண்டலம் வாரியான விபரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 64 பேரும், திருவிக நகரில் 31 பேரும், கோடம்பாக்கத்தில் 24 பேரும், …
செமஸ்டர் தேர்வுகள் அடுத்த பருவத்தின் தொடக்கத்தின்போது நடத்தப்படும்-உயர்கல்வித்துறை அறிவிப்பு
அடுத்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் கல்லூரி பருவத்தேர்வுகள் நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. சென்னை, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், நிகழாண்டு செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற கேள்விகள் மாணவர்கள் மத்தியில் எழுந்தன. இந்த நிலையில், கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகள் தொடங்கும் போது, கல்வி ஆண்டின் தொடக்கத்தில் கல்லூரி பருவத்தேர்வுகள் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கலை அறிவியல், பொறியியல் உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகளுக்கும், இந்த ஆண்டில் நடத்தப்பட வேண்டிய …
சிவப்பு மண்டல பகுதிகளில் தற்போதைய ஊரடங்கு நடைமுறை தொடர்ந்து இருக்கும்- முதல்வர் பழனிசாமி
சிவப்பு மண்டல பகுதிகளில் தற்போதைய ஊரடங்கு நடைமுறை தொடர்ந்து இருக்கும் என்று முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். சென்னை, சென்னை தலைமைச்செயலகத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “ அரசின் சிறப்பான பணிகளை எதிர்கட்சிகள் திட்டமிட்டு தவறாக விமர்சனம் செய்கின்றன. மத்திய அரசிடம் தேவையான நிதியை கேட்டுள்ளோம். எதிர்கட்சி எம்.பி.க்கள் மத்திய அரசிடம் தமிழகத்திற்கான நிதியை கேட்கவில்லை. நோயை வைத்து எதிர்கட்சிகள் அரசியல் செய்வது வேதனை அளிக்கிறது. வெளிமாநிலத்தில் இருந்தும், …
தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது: முதல்வர் பழனிசாமி
தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். சென்னை, தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,267 ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு முதல்வர் பழனிசாமி தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி …
ஊரடங்கில் மக்களுக்கு உதவ அரசியல் கட்சிகள், தன்னார்வலர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு நிபந்தனையுடன் அனுமதி
ஊரடங்கில் மக்களுக்கு உதவ அரசியல் கட்சிகள், தன்னார்வலர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது. சென்னை, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் உணவு, அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவை கிடைக்காமல் சிரமத்துக்கு ஆளானவர்களுக்கு அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு அமைப்புகள், தனிநபர்கள் உதவிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில், பொதுமக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்புகள் நேரடியாக வழங்கக்கூடாது. மாநகரங்களில் மாநகராட்சி கமிஷனர்கள், மாவட்டங்களில் …
சீனாவின் வடகிழக்குப் பகுதிகளில் கொரோனா தாக்கம் அதிகரிப்பு
சீனாவின் உகான் நகரம் கொரோனா பிடியில் இருந்து மெதுவாக மீண்ட நிலையில், வடகிழக்குப் பகுதிகளில் கொரோனா தாக்கம் மீண்டும் ஏற்படத் தொடங்கியுள்ளது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெய்ஜிங் சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 46 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,சமீபத்தில் கொரோனோ பாதிப்புக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 1,500 என அதிகரித்துள்ளது. ஆனால் ரஷ்யாவிலிருந்து சீனர்கள் வெளியேற்றப்பட்டு வருகிற நிலையில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகக் …
சீனாவில் கொரோனாவுக்கு பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் எதனால் இறந்தார்கள்? அதிர்ச்சி தகவல்
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கி பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் சரியான செயற்கை சுவாச கருவி வசதி கிடைக்காமல் இறந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது. பெய்ஜிங் உலகையே இப்போது அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவில் தான் பரவியது. ஆனால் தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் முற்றிலும் குறைந்து உள்ளது. அங்கு மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். சீனாவில் மட்டும் இந்த கொரோனா வைரஸால் 81,953 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 3,339 பேர் …