சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து உருவான கொரோனா வைரஸ் தொற்று பல்வேறு நாடுகளை பாதித்துள்ளது. உலகம் முழுவதும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப் பட்டு உள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர்.
பலியானவர்களில் பாலின விகிதம் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதில் பெண்களை விட ஆண்கள் மூன்று மடங்கு பலியாவதாக கண்டறியப்பட்டுள்ளது. உயிர்பலியாகும் பெண்களின் எண்ணிக்கை 3.4 சதவீதமாக இருக்கும்பட்சத்தில் ஆண்களின் பலி எண்ணிக்கை 9.2 ஆக காணப்படுகிறது.
இது தவிர கொரோனா பாதித்த இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பலியானவர்களில் 71 சதவீதம் பேர் ஆண்கள் என கண்டறியப்பட்டுள்ளது.மேலும் பலியாகும் வீதத்தில் பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு 50 சதவீதம் அதிகம் இருக்கவாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஆண்கள் அதிக அளவில் பலியாக உறுதியான காரணம் எதுவும் அறியப்படாவிட்டாலும் புகைபிடிப்பதால் நுரையீரல் பாதிக்கப்பட்டு அதன் மூலம் பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. காய்ச்சல் இருமல் போன்றவை பொதுவான அறிகுறிகளாக காணப்பட்டாலும் ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் குறைவு காரணமாக கூறப்படுகிறது.
Leave a Reply