தொழுநோய் தடுப்பு மருந்து கொரோனாவை கட்டுப்படுத்துமா? என்பது குறித்து இந்திய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்தி வருகிறார்கள்.

புதுடெல்லி,

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளன. இந்த தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர்.

அறிவியல் தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடுகளைப் போலவே இந்தியாவும் கொரோனா நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ளது.

தொழுநோயை கட்டுப்படுத்தும் மைக்கோ பாக்டீரியம் என்கிற தடுப்பு மருந்து, கொரோனாவை கட்டுப்படுத்தக்கூடும் என்று இந்திய விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். காசநோய்க்கு கண்டுபிடிக்கப்பட்ட பி.சி.ஜி. தடுப்பு மருந்துடன் தொடர்பு உடையதுதான் இந்த மைக்கோ பாக்டீரியம் மருந்து என்று கூறப்படுகிறது.

எனவே கொரோனாவுக்கும் இது பயனளிக்க வாய்ப்பு இருக்கிறது என்கிற அடிப்படையில் இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) இதுதொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த ஆராய்ச்சிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஒப்புதல் அளித்து இருப்பதாக சி.எஸ்.ஐ.ஆர். பொது இயக்குனர் டாக்டர் சேகர் மாண்டே தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “இந்த வகையில் தடுப்பூசி கண்டறிவது என்பது ஒரு நீண்டகால செயல் முறை. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் தடுப்பூசியை நாங்கள் உருவாக்கி வருகிறோம். இன்னும் 2 ஒப்புதல்களுக்காக நாங்கள் காத்து இருக்கிறோம். அவை கிடைத்தவுடன், சோதனைகளை தொடங்குவோம். அடுத்த 6 வாரங்களில் முடிவுகள் தெரியவரும்” என்று கூறினார்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *