புதுடெல்லி,

கொரோனா தொற்று பரவலால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் இந்திய நிறுவனங்கள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளன.
இதனைக் கருத்தில் கொண்டு விற்பனையில் சரிவைச் சந்தித்து வரும் நிறுவனங்களை, சீன நிறுவனங்கள் கையகப்படுத்துவதைத் தவிர்க்கும் விதமாக ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் அந்நிய நேரடி முதலீடுகளுக்கான விதிமுறையை கடுமையாக்கின.

இந்த நிலையில், இந்தியாவும் அந்நிய நேரடி முதலீடுகளுக்கு அரசின் முன் அனுமதி கட்டாயம் என்ற வகையில் திருத்தம் செய்துள்ளது. இதுகுறித்து உள்நாட்டு வர்த்தகம் மற்றும் தொழில்கள் மேம்பாட்டுத் துறை வெளியிட்ட குறிப்பில்,இந்தியாவின் எல்லையோர நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் அல்லது இந்தியாவில் முதலீடு செய்யும் நிறுவனர் ஏதேனும் எல்லையோர நாட்டு குடிமகனாக இருந்தாலோ அல்லது இந்தியாவில் முதலீடு செய்யும் நிறுவனர் ஏதேனும் எல்லையோர நாட்டில் இருப்பவராக இருந்தாலோ, அரசிடம் முதலில் முறையிட வேண்டும் என்று விதியில் திருத்தம் செய்தது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து, ராகுல் காந்தி கூறும் போது, “ எனது எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு அந்நிய நேரடி முதலீடு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்ததற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *