பள்ளி திறப்பு தேதி தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது.

சென்னை,

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டு இருக்கின்றன. பிளஸ்-1 பொதுத்தேர்வின் இறுதி தேர்வும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வும் தள்ளிவைக்கப்பட்டது. அதேபோல், 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் ஆண்டின் இறுதி தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அரசால் அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே நடைபெற்று முடிந்த பிளஸ்-2 பொதுத்தேர்வு மற்றும் நடத்தி முடிக்கப்பட்ட பிளஸ்-1 பொதுத் தேர்வின் விடைத்தாள்கள் திருத்தும் பணியும் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.

ஊரடங்கு முடிந்ததும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு குறித்த தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஊரடங்கு மே மாதம் 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிந்த பிறகு 10 நாட்கள் இடைவெளிவிட்டுதான் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடைபெற வாய்ப்பு உள்ளது.

வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும். பொதுத்தேர்வு, விடைத்தாள் திருத்தும் பணிகள், உள்ளிட்ட பணிகள் இருப்பதால் பள்ளி திறப்பு தேதி தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *