வேகமாக பரவி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு ஊசி கண்டுபிடிப்பதற்கு குறைந்தது ஒரு வருடம் ஆகலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு ஊசியை கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு ஊசியை கண்டுபிடிக்க ஒரு வருடம் ஆகலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் மார்க்ரெட் ஆரிப் கூறியதாவது:-
கொரோனா தடுப்பு ஊசியை கண்டுபிடிக்கும் சோதனை பல நாடுகளில் ஆய்வு கட்டத்திலேயே உள்ளது. இதனால் தடுப்பு ஊசியை கண்டுபிடிக்க குறைந்தது ஒரு வருடம் ஆகலாம். உலக அளவில் கொரோனா வைரஸ் 90 சதவீதம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவி உள்ளது.
இத்தாலி, ஸ்பெயினில் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் இங்கிலாந்து, துருக்கியில் கொரோனா வைரஸ் அதிவேகத்தில் பரவி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply