டெல்லியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. கொரோனாவால் வீடுகளில் முடங்கி கிடக்கும் மக்கள் அச்சம் அடைந்தனர்.

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் இன்று மாலை 5.45 மணியளவில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவான இந்த நில நடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தன. கொரோனா பாதிப்பு காரணமாக வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் மக்கள், நில நடுக்கத்தால் அச்சம் அடைந்தனர்.

டெல்லி வாசிகள் பலரும் நில நடுக்கத்தை உணர முடிந்ததாக தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டனர். நில நடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

நிலநடுக்கம் ஏற்பட்டதும், டுவிட்டரில் பதிவிட்டுள்ள டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், “ டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. அனைவரும் நலமாக இருப்பார்கள் என நம்புகிறேன். அனைவரின் நலனுக்காகவும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *