இந்தியாவில் கொரோனா பாதிப்பு விகிதம் குறைவாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜெனீவா,
உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது கொரோனா பாதிப்பு விகிதம் இந்தியாவில் குறைவாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 16 ஆம் தேதி உலக சுகாதார அமைப்பின் சார்பில் அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரசுக்கான சோதனைகளை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது.
இந்தியாவை பொறுத்தவரையில் ஒவ்வொரு 100 சோதனைகளுடன் ஒப்பிடுகையில் மற்ற நாடுகளை காட்டிலும் குறைவான அளவில் பாசிட்டிவ் ஆக காண்பிக்கிறது. மேலும் 10 லட்சம் நோயாளிகளில் குறைந்த பரிசோதனை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. அதாவது 10 லட்சத்துக்கான நாட்டின் சோதனைகள் 66 ஆக மட்டுமே உள்ளது.
அதே நேரத்தில் பஹ்ரைன் நாட்டில் 10 லட்சத்துக்கு 29,591 ஆகவும், இத்தாலியில் 11,448 ஆகவும், அமெரிக்காவில் 5,027 ஆகவும் உள்ளது. அதே நேரத்தில் பாசிட்டிவ் விகிதம் மிகக் குறைவாக உள்ளது. இந்த தகவலின் மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு விகிதம் குறைவாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
Leave a Reply