கொரோனா தாக்குதலுக்கு இத்தாலியில் உயிரிழப்போரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
ரோம்:
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது.
உலகம் முழுவதும் 16 லட்சத்து 85 ஆயிரத்து 610 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 12 லட்சத்து 8 ஆயிரத்து 290 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 3 லட்சத்து 75 ஆயிரத்து 221 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலுக்கு இதுவரை ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 99 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டாலும் ஐரோப்பிய நாடுகளில் தான் வைரசுக்கு அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இத்தாலியில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.
அந்நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 577 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 30 ஆயிரத்து 455 பேர் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
உலக அளவில் கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள இத்தாலியில் வைரசின் தாக்கம் வெகுவாக குறைந்து வருகிறது.
இத்தாலியில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 570 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 849 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், கடந்த வாரங்களுடன் ஒப்பிடும் போது வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
தேதி வாரியாக இத்தாலியில் கொரோனாவுக்கு பலியோனோர் எண்ணிக்கை விவரம் வருமாறு:-
மார்ச் 20 – 627
மார்ச் 21 – 793
மார்ச் 22 – 651
மார்ச் 23 – 601
மார்ச் 24 – 743
மார்ச் 25 – 683
மார்ச் 26 – 712
மார்ச் 27 – 919
மார்ச் 28 – 889
மார்ச் 29 – 756
மார்ச் 30 – 812
மார்ச் 31 – 837
ஏப்ரல் 1 – 727
ஏப்ரல் 2 – 760
ஏப்ரல் 3 – 766
ஏப்ரல் 4 – 681
ஏப்ரல் 5 – 525
ஏப்ரல் 6 – 636
ஏப்ரல் 7 – 604
ஏப்ரல் 8 – 542
ஏப்ரல் 9 – 610
ஏப்ரல் 10 – 570
கடந்த சில நாட்களாக இத்தாலியில் கொரோனாவுக்கு உயிரிழப்போர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.
Leave a Reply