உலகையே கதிகலங்க வைக்கும் கொரோனா கொடூரத்தில் இருந்து 16 நாடுகள் மட்டும் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன்
உலகம் முழுவதும் இதுவரை 13 கோடி மக்கள் கொரோனா நோய்க்கு இலக்காகியுள்ளனர். அதுமட்டுமின்றி உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் கொரோனா பரவியுள்ளது.ஆனால் 16 நாடுகள் மட்டும் கொரோனா கொடூரத்திலிருந்து ஆச்சரியமாகத் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில், ஏமன், கிரிபட்டி, கொமொரோஸ், லெசோதோ, மார்ஷல் தீவுகள், மைக்ரோனேஷியா, வட கொரியா, பலாவ், சாலமன் தீவுகள், சமோவா, தஜிகிஸ்தான், டோங்கா, துர்க்மெனிஸ்தான், துவாலு, நவ்ரு மற்றும் வனடு ஆகிய நாடுகளே அவை. இந்த நாடுகள் இதுவரை உத்தியோகப்பூர்வமாக கொரோனா பாதிப்பு தொடர்பில் அறிவிக்கவில்லை என்றாலும், இந்த 16 நாடுகளிலும் கொரோனா பாதிப்பு இல்லை என அறுதியிட்டுக் கூற முடியாது என்கின்றனர் நிபுணர்கள்.
இந்த நாடுகளில் முறையான கொரோனா பரிசோதனைகள் முன்னெடுக்க முடியாத சூழல் இருக்கலாம் எனவும்,அங்குள்ள சமூக சூழல் உள்ளிட்ட பல காரணங்களால், கொரோனா பாதிப்பு தொடர்பில் வெளியிட மறுக்கலாம்,அல்லது கொரோனா பரவலை எதிர்கொள்ளக் கடுமையான சுய தனிமைப்படுத்தலை அமலில் வைத்திருக்கலாம் என்ற 3 காரணங்களை நிபுணர்கள் வரிசைப்படுத்தியுள்ளனர்.
மேலும், ஆப்பிரிக்க நாடுகளைப் பொறுத்தமட்டில் அங்குள்ள அரசாங்கம் வெளியிட்டுள்ள எண்ணிக்கையை விடவும் பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.கொரோனா வைரஸ் ஆப்பிரிக்க கண்டத்தில் முதன்முதலில் பரவியபோது, இரண்டு நாடுகளால் மட்டுமே உரிய சோதனைகளை முன்னெடுக்க முடிந்தது.
தற்போது இங்குள்ள 54 நாடுகளில் 47 நாடுகள் உரிய சோதனைகள் மேற்கொள்வதில் மும்முரம் காட்டி வருகின்றன.கொரோனா பரவல் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியிடாத நாடு வட கொரியா. சீனாவையே முழுமையாக நம்பியுள்ள வட கொரியாவில் மார்ச் துவக்கத்தில் கொரோனாவால் மரணங்கள் ஏற்பட்டுள்ளது என நிபுணர்கள் கணிப்பு.
வடகொரியா போன்று இன்னொரு நாடு துர்க்மெனிஸ்தான். உலகில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ஈரானுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் இந்த நாட்டில் இதுவரை பாதிப்பு ஏற்படவில்லை என
கூறப்படுகிறது.ஆனால் நவ்ரூ போன்ற குட்டி நாடுகள் முன்னெடுத்த நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு முற்றாகத் தவிர்க்கப்பட்டது. மார்ச் 2 ஆம் தேதியிலிருந்தே இங்கு ஊரடங்கு அமுலில் உள்ளது மட்டுமின்றி
இங்குள்ள 10,000 குடிமக்களும் சுய தனிமைப்படுத்தலுக்கும் உள்ளானார்கள்.
Leave a Reply