நியூயார்க்: ஊரடங்கு பலன் அளிக்க தொடங்கியதன் காரணமாக, நியூயார்க் மாகாணத்தில் கடந்த புதன் முதல் நேற்று வரையிலான 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும், புதிய ஐ.சி.யூ சேர்க்கைகளும் குறைய ஆரம்பித்துள்ளது. தொற்றுநோய்க்கு எதிரான நியூயார்க் மாகாண போரில், வெற்றிக்கான அறிகுறியாக இது பார்க்கப்படுகிறது.
புதிதாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெறும் 200 ஆக குறைந்தது. இது கொரோனா தாக்கம் தொடங்கியதிலிருந்து மிகக் குறைவான எண்ணிக்கை என கவர்னர் கியூமோ கூறினார். ஐ.சி.யூ சேர்க்கைகளின் எண்ணிக்கை மார்ச் 20 க்குப் பிறகு மிகக் குறைந்த எண்ணிக்கையில் இப்போதுதான் நடந்துள்ளது. இதேநிலை தொடர்ந்தால், மருத்துவமனைகளில் இருப்பவர்களின் எண்ணிக்கை விரைவில் குறையத் தொடங்கும். வைரஸ் தாக்குதல் அதன் உச்சகட்டத்தை கடந்துவிட்டது என்பதற்கான அறிகுறியாக கருதலாம் என சொல்லப்படுகிறது.
Leave a Reply