சவுதி அரேபியா மன்னர் குடும்பத்தினரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த 150 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ரியாத்:
சவுதிஅரோபியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. அங்கு இதுவரை 3,200 பேர் பாதிக்கப்பட்டும் 44 பேர் பலியாகியும் உள்ளனர்.
இந்த நிலையில் சவுதி அரேபியா மன்னர் குடும்பத்தினரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த 150 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ரியாதின் ஆளுநரும், இளவரசருமான பைசல் சின் பந்தர் பின் அப்துல் ஆசிஸ்சுக்கு (வயது70) கொரோனா பாதிப்பால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதால் அரசர் சல்மான் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன்னர் குடும்பத்தில் மேலும் பலருக்கு தொற்று அறிகுறி இருப்பதால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பதற்காக படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருவதாக சிறப்பு மருத்துவமனை ஒன்று தெரிவித்துள்ளனர்.
மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த பல இளவரசர்கள் அடிக்கடி ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வார்கள். இதனால் கொரோனா வைரஸ் தொற்று பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Leave a Reply