உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களில் 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரசில் இருந்து குணமடைந்துள்ளனர்.

ஜெனிவா:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 209 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

இதற்கிடையே, இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

மேலும், மருத்துவத்துறையினரின் தீவிர சிகிச்சை மற்றும் தன்னலமற்ற சேவைகளால் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் பலர் குணமடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், உலகம் முழுவதும் 15 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு பரவியுள்ள இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து இதுவரை 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

கோப்பு படம்

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 15 லட்சத்து 91 ஆயிரத்து 523 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவியவர்களில் இதுவரை 3 லட்சத்து 53 ஆயிரத்து 151 பேர் சிகிச்சைக்கு பின் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

வைரசிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களில் அதிக எண்ணிக்கையை கொண்ட நாடுகள் சில வருமாறு:-

அமெரிக்கா – 24,961
ஸ்பெயின் – 52,165
இத்தாலி – 28,470
பிரான்ஸ் – 23,206
ஜெர்மனி – 50,557
சீனா – 77,370
ஈரான் – 32,309
பெல்ஜியம் – 5,164
சுவிஸ்சர்லாந்து – 10,600
கனடா – 5,218
ஆஸ்திரியா – 5,240
தென்கொரியா – 6,973

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *