உலகின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தோன்றிய ‘பிங்க் சூப்பர் மூன்’ நிலவின் அறிய புகைப்படங்களில் சிலவற்றை காணலாம்.
மாஸ்கோ:
பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள தொலைவு வழக்கமான தூரம் 3 லட்சத்து 84 ஆயிரத்து 400 கிலோமீட்டர்கள் ஆகும். ஆனால், சில வானியல் நிகழ்வுகளின் போது நிலவு பூமிக்கு மிகவும் அருகில் வரும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்வுகளின் போது பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான தூரம் பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் குறைந்து இரு கிரகங்களுக்கும் இடையேயான இடைவெளி மிகவும் குறைவாக இருக்கும்.
அந்த நிகழ்வின் ஒரு பகுதியாக இந்த ஆண்டு (2020) ஏப்ரல் 7 மற்றும் 8 ஆகிய இரண்டு தேதிகளில் நிலவு பூமிக்கு மிக அருகில் வந்தது. வழக்கமான தூரத்தை விட சுமார் 28 ஆயிரம் கிலோமீட்டர்கள் குறைவாக அதாவது 3 லட்சத்து 56 ஆயிரத்து 900 கிலோமீட்டர்கள் என்ற தூரத்தில் நிலவு பூமிக்கு மிக அருகில் வரும்.
இந்த அதிசய நிகழ்வின் போது நிலவு பூமிக்கு மிக அருகில் பெரிதாகவும், வெளிச்சமாகவும் காணப்பட்டது.
வட அமெரிக்காவில் ஏப்ரல் மாதம் பூத்துக்குளுங்கும் மோஸ் பிங்க் எனப்படும் பூக்களை பெயரில் இருந்து இந்த ஆண்டில் தோன்றும் இந்த முதல் சூப்பர் நிலவுக்கு ’பிங்க் சூப்பர் மூன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
Leave a Reply