கொல்கத்தாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண் குழந்தைகள் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினர்.
கொல்கத்தா,
கொல்கத்தா நகரில் உள்ள பொலியகாட்டா ஐ.டி. ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் 28-ந்தேதி 2 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டார்கள். ஒன்று 9 மாத பெண் குழந்தை, இன்னொன்று 6 வயது பெண் குழந்தை. இருவரும் சகோதரிகள். 2 பேருக்கும் கொரோனா தொற்று இருந்தது. அவர்களின் தாயும் உடன் இருந்தார். ஆனால் அவருக்கு வைரஸ் தொற்று இல்லை. இருந்தாலும் குழந்தைகளுக்காக அவரும் தனி வார்டில் இருந்தார்.
பொதுவாக கைக்குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவு. பெரியவர்களுக்கு வெளிப்படும் அளவில் அவர்களுக்கு, வைரஸ் அறிகுறிகளும் வெளித்தெரிவது இல்லை. இதனால், அவர்கள் மீது டாக்டர்கள் அதிக அக்கறை எடுத்து சிகிச்சை அளித்தனர்.
கடந்த 8 நாட்களில் அவர்கள் பூரணமாகக் குணம் அடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை நடத்திய மருத்துவ சோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு 2 குழந்தைகளையும் வீட்டுக்கு எடுத்துச் செல்ல டாக்டர்கள் அனுமதித்தனர். கொரோனா தொற்றில் இருந்து தப்பிய இளம் நோயாளிகள், இந்த இரு குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply