புதுடில்லி: கொரோனா வைரசில் இருந்து பாதுகாக்கும் வகையில் நாள் தோறும் 1000 பாதுகாப்பு கருவிகளை உற்பத்தி செய்ய இந்திய ரயில்வே முடி வு செய்துள்ளது.
இது குறித்து இந்திய ரயில்வே தெரிவித்து இருப்பதாவது: நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்திற்கும மேல் உள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 114 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் நோய்க்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மருத்து பணியாளர்களை பாதுகாக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள ரயில்வே பணி மனைகளில் சுமார் 17 பணிமனைகள் மூலம் பாதுகாப்புகருவிகள் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி செய்யப்படும் பாதுகாப்பு கருவிகளை நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவர்களுக்கு வழங்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 50 சதவீத தேவை பூர்த்தி செய்ய முடியும் என நம்பப்படுகிறது. இவ்வாறு ரயில்வே செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply