இங்கிலாந்து நாட்டில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 917 பேர் உயிரிழந்தனர். இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
லண்டன்:
சீனாவில் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது.
உலகம் முழுவதும் 17 லட்சத்து 75 ஆயிரத்து 586 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 558 பேர் பலியாகியுள்ளனர்.
இதற்கிடையில், சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தற்போது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளையும் புரட்டி எடுத்து வருகிறது. குறிப்பாக இங்கிலாந்து நாட்டில் வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, இங்கிலாந்தில் 78 ஆயிரத்து 991 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 5 ஆயிரத்து 233 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்கும் காட்சி
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 344 பேர் மட்டுமே சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் வைரஸ் தாக்குதலுக்கு 917 பேர் பலியாகியுள்ளனர். இதனால் கொரோனாவுக்கு இங்கிலாந்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 875 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு இங்கிலாந்தில் பலியானோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கி வருவதால் அந்நாட்டு மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.
Leave a Reply