தமிழகத்தில் எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம்,
விளைபொருட்களை விற்க செல்லும் விவசாயிகளுக்கு யாரும் எந்த தடையும் விதிக்கக் கூடாது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் பழனிசாமி மேலும் கூறியதாவது:- “ சேலம் மாவட்டத்தில் நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதித்த 24 பேரில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் .
சேலம் மாவட்டத்தில் 9 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. எதிர்கட்சி தலைவர் பொறுப்புடன் செயல்பட வேண்டும். ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் செயல்படுகிறது என்பதை ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும். மருத்துவர்கள் தான் ஆலோசனை கூற முடியும். அரசியல்வாதிகள் எப்படி ஆலோசனை கூற முடியும்? மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பின்பற்றினால் தான் நோயை கட்டுப்படுத்த முடியும்
1.25 லட்சம் ரேபிட் பரிசோதனைக் கருவிகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 24 ஆயிரம் கருவிகள் வந்துள்ளன. தமிழகத்தில் எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது திங்கட்கிழமை அறிவிக்கப்படும். விளைபொருட்களை விற்க செல்லும் விவசாயிகளுக்கு யாரும் எந்த தடையும் விதிக்கக் கூடாது” என்றார்.
Leave a Reply