சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் 27 வயது பெண் டாக்டருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் 27 வயது பெண் டாக்டருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இதனால் அவரை வானகரத்தில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இவர் கடந்த 3-ந் தேதி வரை ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வந்ததால் அவரை சந்தித்த நபர்கள் யார்-யார்? என்று பட்டியல் எடுத்து அவர்களையும் தனிமைப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.
அந்த ஆஸ்பத்திரிக்கும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. இந்த ஆஸ்பத்திரிக்கு எத்தனை நோயாளிகள் வந்தனர் என்ற கணக்கெடுக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த பெண் டாக்டருக்கு கொரோனா வைரஸ் எப்படி வந்தது? என்று அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர். இதில் அவரது தந்தை ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருப்பது தெரியவந்தது. இவரும் டாக்டர் தான். அமைந்தகரையில் தனியாக கிளினீக் நடத்தி வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தந்தை-மகள் இருவருக்கும் கொரோனா தொற்று வந்துள்ளதால் அவரது குடும்பத்தினரையும் தனிமைப்படுத்துமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதேபோல் கொளத்தூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் 47 வயது மருத்துவருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக கூறி ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Leave a Reply