புதுடில்லி: அனுமன் சஞ்சீவி மூலிகையை கொண்டுவந்து லக்ஷ்மன் உயிரை காப்பாற்றியது போல இந்தியா ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை வழங்கி பிரேசில் மக்களை காக்க வேண்டும் என பிரேசில் அதிபர் ஜெயிர் போல்செனாரோ பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு, ஜெயிர் போரல்செனரோ எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: கடவுள் ராமரின், சகோதரரான லட்சுமணரை காப்பாற்ற, கடவுள் அனுமன், இமயமலையில் இருந்து புனித மருந்தை எடுத்து வந்தார். அதேபோல, இயேசு, நோயுள்ளவர்களை, தன் ஆற்றலால் குணப்படுத்தினார். தற்போது கொரோனாவால், ஏற்பட்டிருக்கும உலகளாவிய பிரச்னையை, இந்தியாவும், பிரேசிலும் இணைந்து எதிர்கொண்டு வெற்றி பெறும் எனக்கூறியுள்ள அவர், ஹைட்ராக்ஹிகுளோரோகுயின் மருந்தை பிரேசிலுக்கு, இந்தியா ஏற்றுமதி செய்ய வேண்டும் எனக்கூறியுள்ளார்.
இதே மருந்தை, அமெரிக்காவிற்கு வழங்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்திருந்தார். வழங்காவிடில் , பதிலடி கொடுக்கப்படும் எனக்கூறியிருந்தார். இந்நிலையில், நேற்று, மனிதநேய அடிப்படையில், அந்த மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், மோடி கிரேட், அவர் ரியலி குட் என பாராட்டு தெரிவித்தார்.
Leave a Reply