துபாய்:கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, உலகம் முழுவதும் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், கச்சா எண்ணெய் விலை சரிந்தது. இந்நிலையில் ரஷ்யா, பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகளுடன் சவுதி அரேபியா ஒப்பந்த குழுவிலிருந்து வெளியேறிவிட்டதாக கூறிவந்தது. இதைதொடர்ந்து சவுதி அரேபியா, ரஷ்யாவின் நிலையை கண்டித்துள்ளது.
இதற்கிடையே பெட்ரோல் உற்பத்தியாளர்கள் அவசர கூட்டத்திற்கு முன்னதாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது, மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே பெட்ரோல் விலை கடுமையாக சரியத் தொடங்கியது. கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 24 டாலராக சரிந்தது. இதுவே, ஒரு ஆண்டுக்கு முன்பு 70 டாலருக்கு மேலாக இருந்தது.இந்நிலையில் வரும் திங்களன்று திட்டமிடப்பட்ட வீடியோ கான்பரன்ஸ் மாநாட்டில் சவுதி அரேபியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான கோபம் வெளிப்படும். அது ஒப்பந்தத்திற்கு எதிராக நெருக்கடி ஏற்படும் என தெரிகிறது.
அமைச்சர்கள் அறிக்கை
சவுதி அரேபியா வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல் சவுத் மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் இளவரசர் அப்துல் அஜிஸ் பின் சல்மான் அல் சயுத் ஆகிய இருவரும் தனித்தனியே அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
அந்த அறிக்கையில், ஒப்பந்தத்தை மீறியதால் ரஷ்யாவுடன் ஒப்பந்தத்தை நிறுத்தி கொள்ளவோ அல்லது நீட்டீப்பு செய்யவோ எடுத்த முயற்சிக்கு சவுதி அரசும் மற்ற 22 நாடுகளும் அதற்கு ஒப்புகொள்ளவில்லை. மேலும் பெட்ரோல் சந்தையில் ஏற்பட்டுள்ள பஞ்சத்தை தடுக்க, பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் நாடுகளுடன் சேர்ந்து முயற்சி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a Reply