புதுச்சேரியின் மாஹே பகுதியைச் சேர்ந்த 71 வயது முதியவர் கொரோனாவுக்கு இன்று காலை உயிரிழந்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரியின் மாஹேவைச் சேர்ந்த 71 வயது முதியவர் காய்ச்சலால் அவதிப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது.
கடந்த ஒரு வாரமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, மாஹேவில் இருவர் உள்பட மொத்தம் 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாஹேவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவரில் ஒரு பெண் ஏற்கனவே குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் மற்றொருவரான முதியவர் உயிரிழந்துள்ளார்.
Leave a Reply