கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பனை தொழில் செய்யும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள், ஷாப்பிங் மால்கள், பெரிய கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளான மளிகை, காய்கறி கடைகள், பெட்ரோல் நிலையங்களுக்கு நேர கட்டுப்பாட்டுடன் இயங்க அனுமதிக்கப்பட்டடுள்ளது
விவசாய விளைபொருட்கள் விவசாயம் சார்ந்த பணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி படடுள்ளது
அதுபோல் விவசாயத்தை சார்ந்த பனை தொழிலுக்கு இருக்கும் தடையை நீக்கி பதநீர் இறக்கி விற்பனை செய்வதற்கு அரசாணை வெளியிடவேண்டும் பாதிக்கப்பட்ட பனைத்தொழிலாளிகளுக்கு பனை வாரியம் மூலம் பேரிடர் உதவித்தொகை மாதம் ஐந்தாயிரம் வழங்க வேண்டும் . பனங்காட்டு மக்கள் கழகம் தலைவர் S.A .சுபாஷ் பண்ணையார் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் .
Leave a Reply