டெல்லி தப்லீக் ஜமாத் தலைவர் மீது பண மோசடி செய்ததாக அமலாக்கத்துறை வழக்கு தாக்கல் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி
டெல்லியின் நிஜாமுதீனில் கடந்த மாதம் தப்லீக் ஜமாத் கூட்டத்தை நடத்தியதற்காக அதன் தலைவர் மவுலானா சாத் காந்தல்வி மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது அமலாக்க இயக்குநரகம் அவர் மீது பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டி உள்ளது.
மவுலானா சாத் மற்றும் ஜமாத் மற்றும் பிறருடன் தொடர்புடைய அறக்கட்டளைகளுக்கு எதிரான அமலாக்க வழக்கு தகவல் அறிக்கை (ஈ.சி.ஐ.ஆர்) டெல்லி போலீஸ் வழக்கின் அடிப்படையில் அமலாக்க துறையால் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது கடந்த சில நாட்களாக தப்லீக் ஜமாத் மற்றும் அதன் அலுவலக நிதி மற்றும் பரிவர்த்தனைகள் குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருவதாகவும், வங்கிகள் மற்றும் நிதி புலனாய்வு சேகரிப்பு நிறுவனங்களிடமிருந்து பல்வேறு ஆவணங்களைப் பெற்றுள்ளதாகவும் கூறினார்.
வெளிநாடு மற்றும் உள்நாடுகளில் அந்த அமைப்பு பெற்ற சில நன்கொடைகளும் அமலாக்க துறையின் கண்காணிப்பில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து விசாரிப்பதற்காக சுய தனிமைப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட மவுலானா சாதிற்கு அமலாக்கத்துறை விரைவில் சம்மன் அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply